Dinamalar

மேக்ஸ்வெல் விளாசிய ‘சிக்சர்’ * பெங்களூரு அணி நன்றி ,  
 

மேக்ஸ்வெல் விளாசிய ‘சிக்சர்’ * பெங்களூரு அணி நன்றி

சென்னை: பெங்களூரு, பஞ்சாப் அணிகள் ஒருவருக்கு ஒருவர் நன்றி தெரிவித்துக் கொண்ட விஷயம் வைரல் ஆக பரவி வருகிறது. ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல். 2020 ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணிக்காக 13 போட்டியில் 108 ரன் மட்டும் எடுத்தார். இதில் ஒரு சிக்சர் கூட அடிக்கவில்லை. அடுத்து நடந்த ஆஸ்திரேலிய தொடரில் இந்தியாவுக்கு எதிராக சிக்சர் மழை பொழிய, ரசிகர்கள் இவரை திட்டித் தீர்த்தனர். இருப்பினும் 2021 சீசனில் பெங்களூரு அணி இவரை வாங்கியது.

மும்பைக்கு எதிரான முதல் போட்டியில் அடுத்தடுத்து இரு விக்கெட் சரிந்த நிலையில் கோஹ்லியுடன் இணைந்து, மூன்றாவது விக்கெட்டுக்கு 52 ரன்கள் சேர்த்தார் மேக்ஸ்வெல். இவர் அடித்த சிக்சர் 100 மீ., துாரத்துக்கு சென்றது. ஐ.பி.எல்., தொடரில் 1079 நாளுக்குப் பின் மேக்ஸ்வெல் அடித்த சிக்சர் இது.

28 பந்தில் 39 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார். மேக்ஸ்வெல் சிக்சர் அடித்ததும், பெங்களூரு அணியின் 'டுவிட்டர்' சமூகவலைத்தளத்தில்,'பெங்களூரு அணிக்காக முதல் சிக்சர், பஞ்சாப் அணிக்கு நன்றி, சமூக இடைவெளி இல்லை என்றால் உங்களை கட்டிப்பிடித்திருப்போம்,' என தெரிவித்தது. அதாவது மேக்ஸ்வெலை கழற்றி விட்டதுக்கு பஞ்சாப் அணிக்கு நன்றி தெரிவித்தது.

அடுத்த ஒரு மணி நேரத்தில் பஞ்சாப் அணி வெளியிட்ட பதில் 'டுவிட்டர்' செய்தியில்,'கெய்ல், ராகுல், சர்பராஸ், மயங்க் அகர்வால், மன்தீப் சிங்கை எங்களுக்கு கொடுத்ததற்கு நன்றி,' என தெரிவித்தது.

இந்த வீரர்கள் எல்லாம் ஏற்கனவே பெங்களூரு அணிக்காக விளையாடி, பின் பஞ்சாப் அணியில் இணைந்தனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...