Dinamalar

சென்னையில் டில்லி அணி * இன்று மும்பையுடன் மோதல் ,  
 

சென்னையில் டில்லி அணி * இன்று மும்பையுடன் மோதல்

சென்னை: மும்பை, டில்லி அணிகள் மோதும் ஐ.பி.எல்., லீக் போட்டி இன்று சென்னையில் நடக்கிறது. கடந்த சீசன் பைனலில் மும்பையிடம் தோற்று கோப்பை இழந்த டில்லி அணி, இன்று பதிலடி கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கின்றது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று நடக்கும் லீக் போட்டியில் நடப்பு சாம்பியன், ரோகித் சர்மாவின் மும்பை அணி, ரிஷாப் பன்ட்டின் டில்லியை எதிர்கொள்கிறது. மும்பை அணியை பொறுத்தவரையில் சென்னையில் ரன்கள் சேர்க்க திணறுகின்றது. இதுவரை மூன்று போட்டியில் பங்கேற்று விட்ட போதும் ரோகித் (94 ரன்), சூர்யகுமார் (97), போலார்டு (47), குயின்டன் (42), இஷான் கிஷான் (41) என ஒருவர் கூட இன்னும் 100 ரன்களுக்கும் மேல் எடுக்கவில்லை. இருப்பினும் அணியின் பவுலிங் பிரிவு சிறப்பாக செயல்படுகின்றது.

சுழற்பந்து வீச்சாளர் ராகுல் சகார் இதுவரை 7 விக்கெட் சாய்த்துள்ளார். 'வேகத்தில்' மிரட்டும் டிரன்ட் பவுல்ட் (6 விக்.,), பும்ரா (3), சுழலில் குர்னால் பாண்ட்யா (3) என அனைவரும் அசத்துகின்றனர். இதனால் குறைவான ஸ்கோர் எடுத்த போதும், அடுத்தடுத்த போட்டிகளில் வெற்றி பெற முடிந்தது.

டில்லி பலவீனம்

மூன்று போட்டிகளை மும்பையில் விளையாடிய டில்லி அணி (2 வெற்றி, 1 தோல்வி), இன்று சென்னை வந்துள்ளது. பேட்டிங்கில் ஷிகர் தவான் (186 ரன்), பிரித்வி ஷா (106) கலக்குகின்றனர். கேப்டன் ரிஷாப் பன்ட் (81) நம்பிக்கை தருகிறார். ஆனால் ஸ்டீவ் ஸ்மித், ரகானே, ஸ்டாய்னிஸ் என பலர் இருந்தும் 'மிடில் ஆர்டர்' பலவீனமாக உள்ளது. பந்துவீச்சில் அவேஷ் கான் (6 விக்.,), வோக்ஸ் (5) நம்பிக்கை தருகின்றனர். சுழலில் அஷ்வின் 1 விக்கெட் மட்டும் சாய்த்தார். சென்னை ஆடுகளம் இவருக்கு சாதகமாக அமையலாம்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...