Dinamalar

டில்லி அணி கலக்கல் வெற்றி: மும்பை அணி ஏமாற்றம் ,  
 

டில்லி அணி கலக்கல் வெற்றி: மும்பை அணி ஏமாற்றம்

சென்னை: மும்பைக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் 'நடப்பு சாம்பியன்' மும்பை, டில்லி அணிகள் மோதின. மும்பை அணியில் ஆடம் மில்னே நீக்கப்பட்டு ஜெயந்த் யாதவ் சேர்க்கப்பட்டார். டில்லி அணியில் கிறிஸ் வோக்ஸ், லுாக்மேன் மெரிவாலாவுக்கு பதிலாக அமித் மிஸ்ரா, ஷிம்ரான் ஹெட்மயர் தேர்வாகினர். 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் 'பேட்டிங்' தேர்வு செய்தார்.

ரோகித் ஆறுதல்: மும்பை அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, குயின்டன் டி காக் ஜோடி சுமாரான துவக்கம் தந்தது. ஸ்டாய்னிஸ் 'வேகத்தில்' குயின்டன் (1) வெளியேறினார். அஷ்வின் வீசிய 4வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்த ரோகித், ரபாடா, அவேஷ் கான் பந்தில் தலா ஒரு சிக்சர் பறக்கவிட்டார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த சூர்யகுமார் யாதவ், அமித் மிஸ்ரா வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி விரட்டினார். இரண்டாவது விக்கெட்டுக்கு 58 ரன் சேர்த்த போது அவேஷ் கான் பந்தில் சூர்யகுமார் (24) அவுட்டானார்.

மிஸ்ரா அசத்தல்: ஆட்டத்தின் 9வது ஓவரை வீசிய அமித் மிஸ்ரா திருப்பம் தந்தார். நான்காவது பந்தில் ரோகித் சர்மாவை (44) வெளியேற்றிய இவர், கடைசி பந்தில் ஹர்திக் பாண்ட்யாவை (0) அவுட்டாக்கினார். அடுத்து வந்த குர்னால் பாண்ட்யா (1), லலித் யாதவ் 'சுழலில்' போல்டானார். அமித் மிஸ்ரா பந்தில் போலார்டு (2) வெளியேறினார். மும்பை அணி 84 ரன்னுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

பின் இணைந்த இஷான் கிஷான், ஜெயந்த் யாதவ் ஜோடி நிதானமாக விளையாட, 14.4 ஓவரில் 100 ரன்னை எட்டியது. அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பிய இஷான் கிஷான், ரபாடா பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். ஏழாவது விக்கெட்டுக்கு 39 ரன் சேர்த்த போது அமித் மிஸ்ரா பந்தில் இஷான் (26) போல்டானார். ரபாடா 'வேகத்தில்' ஜெயந்த் யாதவ்(23) வெளியேறினார். அவேஷ் கான் பந்தில் ராகுல் சகார் (6) சரணடைந்தார்.

மும்பை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 137 ரன் எடுத்தது. பும்ரா (3), பவுல்ட் (1) அவுட்டாகாமல் இருந்தனர். அமித் மிஸ்ரா 4 விக்கெட் கைப்பற்றினார்.

தவான் விளாசல்: எட்டக்கூடிய இலக்கை விரட்டிய டில்லி அணிக்கு பிரித்வி ஷா (7) ஏமாற்றினார். பின் இணைந்த ஷிகர் தவான், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி பொறுப்பாக ஆடியது. குர்னால் பாண்ட்யா வீசிய 9வது ஓவரில் ஸ்மித் 2 பவுண்டரி அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 53 ரன் சேர்த்த போது போலார்டு பந்தில் ஸ்மித் (33) அவுட்டானார். ராகுல் சகார் வீசிய 15வது ஓவரின் முதலிரண்டு பந்தில் ஒரு சிக்சர், ஒரு பவுண்டரி அடித்த தவான் (45), 5வது பந்தில் ஆட்டமிழந்தார். கேப்டன் ரிஷாப் பன்ட் (7) நிலைக்கவில்லை. போலார்டு பந்தை பவுண்டரிக்கு அனுப்பிய ஹெட்மயர் வெற்றியை உறுதி செய்தார்.

டில்லி அணி 19.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 138 ரன் எடுத்து வெற்றி பெற்றது. லலித் யாதவ் (22), ஹெட்மயர் (14) அவுட்டாகாமல் இருந்தனர்.





25 விக்கெட்

நான்கு விக்கெட் வீழ்த்திய அமித் மிஸ்ரா, ஐ.பி.எல்., அரங்கில் மும்பைக்கு எதிராக அதிக விக்கெட் சாய்த்த டில்லி பவுலரானார். இவர், 22 போட்டியில் 25 விக்கெட் கைப்பற்றினார். அடுத்த இடத்தில் அஷ்வின் (21 விக்கெட், 29 போட்டி) உள்ளார்.

* தவிர, மும்பைக்கு எதிராக அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர்கள் பட்டியலில் 2வது இடத்தை பியுஸ் சாவ்லாவுடன் (25 விக்கெட், 21 போட்டி) பகிர்ந்து கொண்டார் மிஸ்ரா. முதலிடத்தில் டுவைன் பிராவோ (28 விக்கெட், 19 போட்டி) உள்ளார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 | 5 comments துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...