Dinamalar

ரோகித் சர்மாவுக்கு அபராதம் ,  
 

ரோகித் சர்மாவுக்கு அபராதம்

சென்னை: டில்லிக்கு எதிராக தாமதமாக பந்துவீசிய மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் டில்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் ‛நடப்பு சாம்பியன்' மும்பை அணியை வீழ்த்தியது. இப்போட்டியில் மும்பை அணி குறிப்பிட்ட நேரத்திற்குள் பந்துவீச தவறியது. இது ஐ.பி.எல்., விதிமுறைப்படி தவறு என்பதால் மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த சீசனில் தாமதமாக பந்துவீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்ட 2வது கேப்டன் ஆனார் ரோகித். ஏற்கனவே சென்னை அணி கேப்டன் தோனிக்கு ரூ. 12 லட்சம் அபராதம் (எதிர்: டில்லி) விதிக்கப்பட்டிருந்தது. இது முதன்முறை என்பதால் கேப்டனுக்கு மட்டும் ரூ. 12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் மீண்டும் இதுபோல தாமதமாக பந்துவீசினால் கேப்டனுக்கு ரூ. 24 லட்சம், மற்ற வீரர்களுக்கு போட்டி சம்பளத்தில் இருந்து 25 சதவீதம் அபராதம் விதிக்கப்படும். மூன்றாவது முறையாக தாமதமாக பவுலிங் செய்தால், கேப்டனுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை மற்றும் ரூ. 30 லட்சம் அபராதம் விதிக்கப்படும்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...