Dinamalar

பஞ்சாப் ‛ஹாட்ரிக்’ தோல்வி: வார்னர் அணியிடம் சரண்டர் ,  
 

பஞ்சாப் ‛ஹாட்ரிக்’ தோல்வி: வார்னர் அணியிடம் சரண்டர்

சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய பஞ்சாப் அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப், ஐதராபாத் அணிகள் மோதின. பஞ்சாப் அணியில் மெரிடித், ஜெய் ரிச்சர்ட்சன் நீக்கப்பட்டு பேபியன் ஆலன், ஹென்ரிக்ஸ் அறிமுகமாகினர். ஐதராபாத் அணியில் முஜீப், சமத், மணிஷ் பாண்டேவுக்கு பதிலாக கேன் வில்லியம்சன், கேதர் ஜாதவ், சித்தார்த் கவுல் தேர்வாகினர். ‛டாஸ்' வென்று முதலில் ‛பேட்' செய்த பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல் (4) ஏமாற்றினார். கலீல் அகமது, புவனேஷ்வர் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த மயங்க் அகர்வால் (22) நிலைக்கவில்லை. நிக்கோலஸ் பூரன் (0) ‛ரன்-அவுட்' ஆனார். சித்தார்த் கவுல், கலீல் பந்தில் தலா ஒரு பவுண்டரி அடித்த கிறிஸ் கெய்ல் (15) சோபிக்கவில்லை. அபிஷேக் சர்மா பந்தில் தீபக் ஹூடா (13), ஹென்ரிக்ஸ் (14) அவுட்டாகினர். பேபியன் ஆலன் (6) ஏமாற்றினார். அபிஷேக், சித்தார்த் பந்தில் தலா ஒரு சிக்சர் விளாசிய தமிழகத்தின் ஷாருக்கான் (22) ஆறுதல் தந்தார். முருகன் அஷ்வின் (9), முகமது ஷமி (3) சொற்ப ரன்னில் வெளியேறினர். பஞ்சாப் அணி 19.4 ஓவரில் 120 ரன்னுக்கு ‛ஆல்-அவுட்' ஆனது. அர்ஷ்தீப் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஐதராபாத் சார்பில் கலீல் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார். பேர்ஸ்டோவ் அரைசதம்: சுலப இலக்கை விரட்டிய ஐதராபாத் அணிக்கு கேப்டன் டேவிட் வார்னர் (37) நல்ல துவக்கம் தந்தார். பொறுப்பாக ஆடிய பேர்ஸ்டோவ், தீபக் ஹூடா பந்தை பவுண்டரிக்கு அனுப்பி அரைசதம் கடந்தார். அர்ஷ்தீப் பந்தை சிக்சருக்கு அனுப்பிய பேர்ஸ்டோவ், வெற்றியை உறுதி செய்தார். ஐதராபாத் அணி 18.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 121 ரன் எடுத்து இந்த சீசனில் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது. பேர்ஸ்டோவ் (63 ரன், 56 பந்து, 3 சிக்சர், 3 பவுண்டரி), வில்லியம்சன் (16) அவுட்டாகாமல் இருந்தனர். ஏற்கனவே சென்னை, டில்லி அணிகளிடம் வீழ்ந்த பஞ்சாப் அணி, ‛ஹாட்ரிக்' தோல்வியை பெற்றது. 5000 ரன் ஒரு ரன் எடுத்த பஞ்சாப் அணி கேப்டன் லோகேஷ் ராகுல், ஒட்டுமொத்த 'டுவென்டி-20' அரங்கில் 5000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார். குறைந்த இன்னிங்சில் இந்த இலக்கை எட்டிய வீரர்கள் பட்டியலில், விண்டீசின் கெய்லுக்கு (132) அடுத்த இடம் பெற்றார் ராகுல் (143). * 'டுவென்டி-20' அரங்கில் 5000 ரன்களை வேகமாக எடுத்த இந்திய வீரர்களில் கோஹ்லி (167), ரெய்னாவை (173) முந்தி, முதலிடம் பெற்றார் ராகுல் (143). 3வது முறை பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரன், இந்த சீசனில் மூன்றாவது முறையாக 'டக்-அவுட்' ஆனார். ஏற்கனவே ராஜஸ்தான், சென்னை அணிகளுக்கு எதிராக ஒரு ரன் கூட எடுக்காமல் அவுட்டானார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...