Dinamalar

வீணாகும் ‘கோடீஸ்வர’ வீரர்கள் * ஐ.பி.எல்., அரங்கில் ஏமாற்றம் ,  
 

வீணாகும் ‘கோடீஸ்வர’ வீரர்கள் * ஐ.பி.எல்., அரங்கில் ஏமாற்றம்

புதுடில்லி: ஏலத்தில் பல கோடிகள் கொடுத்து வாங்கப்பட்ட வீரர்கள், இன்னும் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமலும், கிடைக்கும் வாய்ப்பில் சொதப்புவதும் ஏமாற்றம் தான். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனுக்காக அதிக தொகை கொடுத்து வாங்கப்பட்டவர் ராஜஸ்தானின் கிறிஸ் மோரிஸ் (ரூ. 16. 25 கோடி). அதேபோல பெங்களூருவின் மேக்ஸ்வெல் (ரூ. 14.25 கோடி), சென்னை அணியின் மொயீன் அலி (ரூ. 7 கோடி) தங்கள் அணிகளுக்கான போட்டிகளில் திறமை வெளிப்படுத்த துவங்கி விட்டனர்.

கிருஷ்ணப்பா கவுதம்

ஆனால் ரூ. 9.25 கோடிக்கு சென்னை அணியால் வாங்கப்பட்டவர் கிருஷ்ணப்பா கவுதம். முதல் நான்கு போட்டியில் இவருக்கு ஒரு முறை கூட களமிறங்கும் வாய்ப்பு தரப்படவில்லை. சர்வதேச போட்டிகளில் விளையாடாத ஒரு வீரருக்கு இவ்வளவு பணம் தரப்பட்டது இது தான் முதன் முறை. அதேநேரம் இவர் மாற்று வீரராக மட்டுமே களமிறங்கி வருவது வேதனை தான்.

சொதப்பும் ஆஸி., வீரர்கள்

ஆஸ்திரேலிய அணியை சேர்ந்தவர் ஜெய் ரிச்சர்ட்சன். பஞ்சாப் அணிக்காக ரூ. 14 கோடிக்கு வாங்கப்பட்டார். தனக்கு கொடுக்கப்பட்ட தொகை சரியானது தான் என இன்னும் நிரூபிக்கவில்லை. 3 போட்டியில் 3 விக்கெட் தான் வீழ்த்தினார். ரன் சராசரியும் 10.63 என மோசமாக உள்ளது.

மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ரிலே மெரிடித். ரூ. 8 கோடிக்கு வாங்கப்பட்ட இவர் பஞ்சாப் அணியில் முகமது ஷமிக்கு கைகொடுப்பார் என நம்பப்பட்டது. மாறாக 3 போட்டியில் 2 விக்கெட் தான் வீ்ழ்த்தினார். சராசரியாக ஒரு ஓவருக்கு 10.50 ரன்கள் விட்டுத் தருகிறார். இவர்களது ஏமாற்றம் பஞ்சாப் தோல்விக்கு முக்கிய காரணம்.

வீணான ஜேமிசன்

நியூசிலாந்து அணி உயரமான 'ஆல் ரவுண்டர்' கைல் ஜேமிசன். ஏலத்தில் ரூ. 15 கோடி கொடுத்து வாங்கியது பெங்களூரு. கோல்கட்டா அணிக்கு எதிராக மட்டும் 3 விக்கெட் சாய்த்தார். சராசரியாக 9.80 ரன்கள் விட்டுத்தருகிறார். பேட்டிங்கில் முதல் 3 போட்டியில் 27 ரன் தான் எடுத்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வார்னர் நீக்கம் ஏன் * சொல்கிறார் பயிற்சியாளர் டிரிவர்

வார்னர் நீக்கம் ஏன் * சொல்கிறார் பயிற்சியாளர் டிரிவர்

செப்டம்பர் 28,2021 துபாய்: ''இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் வார்னர் நீக்கப்பட்டார்,'' என ஐதராபாத் பயிற்சியாளர் டிரிவர் பெய்லிஸ் ...
ரூ.30,000 கோடி * ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமம் பெற

ரூ.30,000 கோடி * ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமம் பெற

செப்டம்பர் 24,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., 'டி.வி' ஒளிபரப்பு உரிமம், அடுத்த 5 ஆண்டுக்கு ரூ. 30,000 கோடியை எட்ட உள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் ...
‘வயசானாலும்’ சென்னை ‘ஸ்டைல்’ மாறல!

‘வயசானாலும்’ சென்னை ‘ஸ்டைல்’ மாறல!

செப்டம்பர் 24,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை சாம்பியன் ஆன நம்ம சென்னை அணியை அசைக்க முடியவில்லை. 'டாடிஸ் ஆர்மி' என கேலி செய்தவர்களுக்கு கேப்டன் தோனி, பிராவோ உள்ளிட்ட அனுபவ ...