Dinamalar

நாங்களும் மனிதர்கள் தான் * ஐ.பி.எல்., வீரர்கள் புலம்பல் ,  
 

நாங்களும் மனிதர்கள் தான் * ஐ.பி.எல்., வீரர்கள் புலம்பல்

மும்பை: 'எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் இல்லை, ஏனெனில் நாங்களும் மனிதர்கள் தான்,' என ஐ.பி.எல்., வீரர்கள் புலம்பியுள்ளனர். இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் அதிகமாக உள்ளது. இருப்பினும் அணி நிர்வாகிகள், வீரர்கள் இணைந்து கடுமையான பாதுகாப்பு வளையம் அமைத்து, 14வது ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்று வருகின்றனர்.

இருப்பினும் அதிகமான பாதிப்பு குறித்த செய்திகளால் வீரர்கள் மனதளவில் சோர்ந்துள்ளனர். கவலை மற்றும் பயத்துடன் உள்ளனர். போட்டிக்காக ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு செல்வது வீரர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வீரர்கள் பேசியதாக வெளியான செய்தி:

ஒவ்வொரு நாள் காலைப் பொழுது 'ஆன்டிஜென்', கொரோனா சோதனையுடன் தான் துவங்கும் அல்லது இரண்டாவது நாள் 'ஸ்வாப்' சோதனை செய்ய வேண்டும். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்தாலும் 'மாஸ்க்' அணிந்திருக்க வேண்டும், அடிக்கடி கைகளை சுத்தம் செய்ய வேண்டும். தினமும் காலையில் யாராவது காய்ச்சல் அல்லது இருமலுடன் எழுந்திருக்கின்றனரா என்ற விசாரிப்பும் நடக்கும். உண்மையில் எங்கள் அனைவரிடமும் பயம் காணப்படுகிறது.

எங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என தெரியாமல் இல்லை, ஏனெனில் நாங்களும் மனிதர்கள் தான். எங்களது பணி கிரிக்கெட் விளையாடுவது, அதை நாங்கள் செய்கிறோம். ஒருவேளை இதுவும் இல்லை என்றால் நாங்கள் குடும்பத்தினருடன் வீட்டில் தான் இருப்போம்.

இவ்வாறு வீரர்கள் புலம்பியதாக தெரிகிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...