Dinamalar

சேவக் இல்லாமல் ‘ஓபனிங்’ எப்படி *மும்பை அணி செய்த தவறு ,  
 

சேவக் இல்லாமல் ‘ஓபனிங்’ எப்படி *மும்பை அணி செய்த தவறு

சென்னை: ஐ.பி.எல்., தொடரில் 'நடப்பு சாம்பியன்' மும்பை அணி தள்ளாடுகிறது. 'பேட்டிங்' வரிசையில் சரியான வீரர்களை சரியான இடத்தில் களமிறக்க தவறுவதால், தோல்வி தொடர்கிறது.சென்னையில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சொதப்பிய மும்பை அணி(131/6), பஞ்சாப்பிடம்(132/1) தோல்வி அடைந்தது. மும்பை அணியின் துவக்க வீரர் குயின்டன்(3) விரைவில் அவுட்டானதும், நல்ல 'பார்மில்' இருக்கும் சூர்யகுமார் யாதவ் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இஷான் கிஷான் மூன்றாவதாக வந்தார். மந்தமாக ஆடிய இவர், 17 பந்துகளில் 6 ரன்(ஸ்டிரைக் ரேட் 35.29) மட்டும் எடுத்தார். இதனால் 'பவர்பிளே' ஓவர் முடிவில் மும்பை அணி 21 ரன் தான் எடுத்தது. நான்காவதாக வந்த சூர்யகுமார், 33 ரன் எடுத்து கைகொடுத்தார். இது குறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக் கூறுகையில்,''இத்தொடரில் அரைசதம் அடித்து 'பார்மில்' இருக்கும் சூர்யகுமாரை மூன்றாவது வீரராக களமிறக்கியிருக்க வேண்டும். இவர் 'பவர்பிளே' ஓவரில் விரைவாக ரன் சேர்த்திருப்பார். கடந்த நான்கு போட்டிகளில் சோபிக்காத ஒருவரை முன்னதாக களமிறக்கி அதிக ரன் எடுப்பார் என நம்பினர். நன்றாக விளையாடிய ஒருவரை பின்வரிசையில் வரச் சொல்கின்றனர். 'பவர் பிளே' ஓவரில் சூர்யகுமாரை அனுப்பி இருந்தால், அணிக்கு தேவையான ரன்களை எடுத்து கொடுத்திருப்பார். 16வது ஓவர் வரை கேப்டன் ரோகித்(63)-சூர்யகுமார் நிலைத்து நின்று விளையாடியதே மும்பைக்கு ஆறுதலான விஷயம். கடைசி கட்டத்தில் போலார்டு, பாண்ட்யா அதிரடியாக ரன் சேர்ப்பர் என எதிர்பார்த்தனர். அது நடக்காமல் போய் விட்டது,''என்றார்.முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா கூறுகையில்,''கடந்த போட்டிகளில் மும்பை சரியாக விளையாடாத போதும் 150 ரன்களை எட்டியது. ஆனால் பஞ்சாப் அணிக்கு எதிராக 131 ரன் தான் எடுத்தது. இது மும்பை அணியின் பேட்டிங் ஸ்டைலுக்கு ஏற்றது அல்ல. அதிரடியாக விளையாடக்கூடிய சேவக் இருக்கும் போது, அவரை துவக்க வீரராக களமிறக்காமல், பின்வரிசையில் யாராவது வரச் சொல்வரா... பேட்டிங் வரிசையில் சூர்யகுமாரை மூன்றாவது இடத்தில் ஏன் களமிறக்கவில்லை என புரியவில்லை. வரும் போட்டிகளில் மும்பை அணி வியூகத்தை மாற்ற வேண்டும்,''என்றார்.

பிரித்தி மகிழ்ச்சி

பஞ்சாப் அணியின் சக உரிமையாளரும் பாலிவுட் நடிகையுமான பிரித்தி ஜிந்தா 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில்,'ஐ.பி.எல்., பாதுகாப்பு விதிகள் காரணமாக ஜன்னல் கூட இல்லாத ஓட்டல் அறையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். கடினமான இந்த தருணத்தில் பஞ்சாப் அணியின் வெற்றி, மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கு வாய்ப்பாக அமைந்தது. வலிமையான ஆட்டத்தை வீரர்கள் வெளிப்படுத்தினர். அணியின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி,'என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வார்னர் நீக்கம் ஏன் * சொல்கிறார் பயிற்சியாளர் டிரிவர்

வார்னர் நீக்கம் ஏன் * சொல்கிறார் பயிற்சியாளர் டிரிவர்

செப்டம்பர் 28,2021 துபாய்: ''இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் வார்னர் நீக்கப்பட்டார்,'' என ஐதராபாத் பயிற்சியாளர் டிரிவர் பெய்லிஸ் ...
ரூ.30,000 கோடி * ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமம் பெற

ரூ.30,000 கோடி * ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமம் பெற

செப்டம்பர் 24,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., 'டி.வி' ஒளிபரப்பு உரிமம், அடுத்த 5 ஆண்டுக்கு ரூ. 30,000 கோடியை எட்ட உள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் ...
‘வயசானாலும்’ சென்னை ‘ஸ்டைல்’ மாறல!

‘வயசானாலும்’ சென்னை ‘ஸ்டைல்’ மாறல!

செப்டம்பர் 24,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை சாம்பியன் ஆன நம்ம சென்னை அணியை அசைக்க முடியவில்லை. 'டாடிஸ் ஆர்மி' என கேலி செய்தவர்களுக்கு கேப்டன் தோனி, பிராவோ உள்ளிட்ட அனுபவ ...