Dinamalar

கோல்கட்டா கலக்கல் வெற்றி * பஞ்சாப் அணி ஏமாற்றம் ,  
 

கோல்கட்டா கலக்கல் வெற்றி * பஞ்சாப் அணி ஏமாற்றம்

ஆமதாபாத்: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோல்கட்டா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் கலக்கல் வெற்றி பெற்றது.

இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பை, சென்னையில் போட்டிகள் முடிந்த நிலையில் நேற்று ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்த போட்டியில் பஞ்சாப், கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற கோல்கட்டா அணி கேப்டன் இயான் மார்கன், பீல்டிங் தேர்வு செய்தார்.

திணறல் பேட்டிங்

பஞ்சாப் அணிக்கு கேப்டன் லோகேஷ் ராகுல், மயங்க் அகர்வால் ஜோடி துவக்கம் கொடுத்தது. ராகுல், 19 ரன்னுக்கு வெளியேற, அணியின் ரன் வேகம் சரிந்தது. அபாயகரமான கெய்லை, முதல் பந்தில் 'டக்' அவுட்டாக்கி அனுப்பி வைத்தார் ஷிவம் மாவி. தீபக் ஹூடா (1) கைவிட, கோல்கட்டா அணி 10 ஓவரில் 56/3 ரன்கள் தான் எடுத்தது.

கிளம்பிய மயங்க்

மயங்க் அகர்வால் (31), நரைன் சுழலில் சிக்கினார். வருண் சக்கரவர்த்தி வீசிய போட்டியின் 13 வது ஓவரில் அடுத்தடுத்து சிக்சர், பவுண்டரி அடித்து நம்பிக்கை தந்தார் நிகோலஸ் பூரன் (19), ஹென்ரிக்ஸ் (2) நீடிக்கவில்லை. நரைன் பந்தில் சிக்சர் அடித்த, தமிழகத்தின் ஷாருக்கான் 13 ரன் எடுத்தார்.

கடைசி நேரத்தில் ஜோர்டன் (30) கைகொடுத்தார். பஞ்சாப் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 123 ரன்கள் எடுத்தது. ஷமி (1), அர்ஷ்தீப் சிங் (1) அவுட்டாகாமல் இருந்தனர். கோல்கட்டா சார்பில் பிரசித் கிருஷ்ணா 3, நரைன் 2, கம்மின்ஸ் 2 விக்கெட் வீழ்த்தினர்.

கார்த்திக் '50'

அடுத்து களமிறங்கிய கோல்கட்டா அணிக்கு நிதிஷ் ராணா (0), சுப்மன் கில் (9) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. சுனில் நரைன் 'டக்' அவுட்டான போதும், மார்கன், திரிபாதி (41) இணைந்து அணியை வெற்றிக்கு கொண்டு சென்றனர். ரசல் (10) அவுட்டாக, கோல்கட்டா அணிக்காக 50வது போட்டியில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக், சூப்பர் பவுண்டரி அடித்தார். கோல்கட்டா அணி 16.4 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 126 ரன்கள் எடுத்து, வெற்றி பெற்றது. மார்கன் (47), கார்த்திக் (12) அவுட்டாகாமல் இருந்தனர்.



7000

நேற்று 43 ரன்கள் எடுத்த போது, 'டுவென்டி-20' போட்டிகளில் 7000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டினார் கோல்கட்டா அணி கேப்டன் இயான் மார்கன். இவர் 317 போட்டியில், 37 அரைசதம் உட்பட மொத்தம் 7004 ரன்கள் எடுத்துள்ளார்.



31

ஐ.பி.எல்., அரங்கில் எந்த ஒரு அணிக்கு எதிராகவும் அதிக விக்கெட் சாய்த்த பவுலர்களில் முதலிடம் பெற்றார் கோல்கட்டாவின் சுனில் நரைன். இவர் பஞ்சாப் அணிக்கு எதிராக மட்டும் 31 விக்கெட் சாய்த்துள்ளார். இதற்கு முன் மும்பை வீரர் மலிங்கா, சென்னைக்கு எதிராக 30, டில்லியின் அமித் மிஸ்ரா, ராஜஸ்தானுக்கு எதிராக 30 விக்கெட் வீழ்த்தி இருந்தனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...