Dinamalar

பஞ்சாப் அணி ‘பஞ்சர்’ ஏன்: சேவக் விளக்கம் ,  
 

பஞ்சாப் அணி ‘பஞ்சர்’ ஏன்: சேவக் விளக்கம்

ஆமதாபாத்: ''பஞ்சாப் அணியின் பலவீனமான பேட்டிங் வரிசை தோல்விக்கு காரணம்,'' என, சேவக் தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி (123/9, 20 ஓவர்) 5 விக்கெட் வித்தியாசத்தில் கோல்கட்டா அணியிடம் (126/5, 16.4 ஓவர்) வீழ்ந்தது. பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (31 ரன்), கிறிஸ் ஜோர்டான் (30) மட்டும் ஆறுதல் தந்தனர். கிறிஸ் கெய்ல் (0), தீபக் ஹூடா (1), கேப்டன் ராகுல் (19), நிக்கோலஸ் பூரன் (19) பெரிய அளவில் சோபிக்கவில்லை.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரர் சேவக் கூறியது: பஞ்சாப் அணியில் திறமையான பேட்ஸ்மேன்கள் நிறைய உள்ளனர். ஆனால், இவர்களில் சிலர் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. கெய்ல், பூரன் போன்றவர்கள் அதிரடி காட்டினால் மட்டுமே 200 ரன்களுக்கு மேல் எடுக்க முடியும். இனிவரும் போட்டிகளில் பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

ஐ.பி.எல்., அரங்கில் சிறந்த அணியாக சென்னை உள்ளது. இதற்கு அந்த அணியின் பேட்ஸ்மேன்கள் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை வழங்குகின்றனர். ஒவ்வொரு வீரரும் குறைந்தபட்சம் 20 முதல் 30 ரன் எடுக்கின்றனர். இதுபோல பஞ்சாப் அணியில் இல்லை. ஒரு சிலர் மட்டுமே ரன் எடுத்து உதவுகின்றனர்.

பஞ்சாப் அணியின் பந்துவீச்சு சிறப்பாக உள்ளது. பேட்ஸ்மேன்கள் எழுச்சி பெறும் பட்சத்தில் பஞ்சாப் அணி வெற்றியை தக்கவைத்துக் கொள்ள முடியும்.

இவ்வாறு சேவக் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

செப்டம்பர் 27,2021 துபாய்: ''முதன்முறையாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை,'' என, ஹர்ஷல் படேல் தெரிவித்தார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு ...
பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

செப்டம்பர் 24,2021 அபுதாபி: ''பெங்களூரு, மும்பை அணிகளுக்கு எதிராக கிடைத்த வெற்றிக்கு பவுலர்களின் பங்களிப்பு முக்கியமானது,'' என, கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன் ...
அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

செப்டம்பர் 24,2021 புதுடில்லி: ''அஷ்வின் பயந்து பயந்து பந்து வீசுகிறார்,'' என சேவக் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14 வது ...