Dinamalar

பிரட் லீ ரூ. 41 லட்சம் நிதி: ‘ஆக்சிஜன்’ வாங்க வழங்கினார் ,  
 

பிரட் லீ ரூ. 41 லட்சம் நிதி: ‘ஆக்சிஜன்’ வாங்க வழங்கினார்

புதுடில்லி: இந்திய மருத்துவமனைகள் 'ஆக்சிஜன்' வாங்க, ரூ. 41 லட்சம் நிதி வழங்கினார் ஆஸ்திரேலியாவின் பிரட் லீ. இந்தியாவில் 'கொரோனா' தொற்றின் இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. மருத்துவமனைகளில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் 14வது ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடி வரும் ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் பாட் கம்மின்ஸ், 'கொரோனா' பாதிக்கப்பட்டவர்களுக்கு 'ஆக்சிஜன்' வாங்க ரூ. 37 லட்சம், பிரதமர் நிவாரண நிதிக்கு வழங்கினார். சக ஐ.பி.எல்., வீரர்களையும் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தினார்.

இதனையடுத்து, ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் பிரட் லீ, மருத்துவமனைகளின் 'ஆக்சிஜன்' பற்றாக்குறையை போக்குவதற்காக ரூ. 41 லட்சம் நிவாரண நிதி வழங்கினார். பிரட் லீ 'டுவிட்டரில்' வெளியிட்ட செய்தியில், ''இந்தியாவை எப்போதும் எனது இரண்டாவது வீடாக கருதுகிறேன். போட்டிகளில் விளையாடிய நாட்களிலும், ஓய்வு பெற்ற பின்னரும், இந்திய மக்களிடம் இருந்து கிடைத்து வரும் அன்பும், ஆதரவும் என் மனதில் சிறப்பான இடத்தை பிடித்துள்ளது. கொரோனா தொற்றால் இந்திய மக்கள் பாதிக்கப்படுவது வருத்தம் அளிக்கிறது. இந்திய மருத்துவமனைகளின் 'ஆக்சிஜன்' பற்றாக்குறையை போக்குவதற்காக ரூ. 41 லட்சம் நிவாரண நிதி வழங்குகிறேன். அனைவரும் பாதுகாப்பாக வீட்டில் இருக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்,'' என, தெரிவித்திருந்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...