Dinamalar

கிரிக்கெட் வீரர்களுக்கு தடுப்பூசி * என்ன சொல்கிறார் கிறிஸ் லின் ,  
 

கிரிக்கெட் வீரர்களுக்கு  தடுப்பூசி * என்ன சொல்கிறார் கிறிஸ் லின்

மும்பை: ''ஐ.பி.எல்., தொடரில் இடம் பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்களும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளப் போகிறோம்,'' என மும்பை வீரர் கிறிஸ் லின் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் சிலர், கொரோனா அச்சம் காரணமாக விலகி வருகின்றனர். இதனிடையே மே 1 முதல் இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட உள்ளது.

இந்நிலையில் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும், அவர்கள் விருப்பப்படி தடுப்பூசி செலுத்திக் கொள்ள இந்திய கிரிக்கெட் போர்டு அனுமதி வழங்கியது. தோனி, கோஹ்லி, ரோகித் சர்மா, லோகேஷ் ராகுல் உள்ளிட்டோர் வரும் மே 1ல் தடுப்பூசி செலுத்த உள்ளனர். கொரோனா பாதுகாப்பு வளையத்தில் உள்ள வெளிநாட்டு வீரர்களுக்கு ஊசி வழங்கப்படும் எனத் தெரிகிறது.

இதுகுறித்து மும்பை அணியில் இடம் பெற்றுள்ள கிறிஸ் லின் கூறுகையில்,''ஒவ்வொரு ஐ.பி.எல்., ஒப்பந்தத்தின் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டுக்கு 10 சதவீத வருமானம் கிடைக்கிறது. இதனை பயன்படுத்தி, தொடர் முடிந்ததும் எங்களை தனி விமானத்தில் அழைத்து செல்ல வேண்டும். மக்கள் எங்களை விட மோசமாக பாதிக்கப்பட்டுள்ளனர் எனத் தெரியும். அடுத்த வாரம் தடுப்பூசி செலுத்திக் கொள்வோம்,''என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

செப்டம்பர் 27,2021 துபாய்: ''முதன்முறையாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை,'' என, ஹர்ஷல் படேல் தெரிவித்தார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு ...
பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

செப்டம்பர் 24,2021 அபுதாபி: ''பெங்களூரு, மும்பை அணிகளுக்கு எதிராக கிடைத்த வெற்றிக்கு பவுலர்களின் பங்களிப்பு முக்கியமானது,'' என, கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன் ...
அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

செப்டம்பர் 24,2021 புதுடில்லி: ''அஷ்வின் பயந்து பயந்து பந்து வீசுகிறார்,'' என சேவக் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14 வது ...