Dinamalar

கெய்ல் பீல்டிங்... ரசல் ‘காமெடி’ ,  
 

 கெய்ல் பீல்டிங்... ரசல் ‘காமெடி’

ஆமதாபாத்: கெய்ல் பீல்டிங் செய்ததை பார்த்து, ரசல் சிரித்து மகிழ்ந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப்-கோல்கட்டா அணிகள் மோதிய லீக் போட்டி ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்தது. பஞ்சாப்பின் (123/9) இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணி துவக்கத்தில் மூன்று விக்கெட்டுகளை இழந்து திணறியது. பின் கேப்டன் மார்கன், திரிபாதி இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். இப்போட்டியில் பஞ்சாப் அணியின் 41 வயது 'சீனியர்' வீரர் கெய்ல், துடிப்பாக பீல்டிங் செய்து அசத்தினார். ஷமி வீசிய (3.2வது ஓவர்) பந்தை மார்கன் 'லெக்' திசையில் அடித்தார். இதை வலது பக்கமாக 'டைவ்' அடித்து பிடித்த கெய்ல், பவுலர் பக்கம் இருந்த 'ஸ்டம்சை' தகர்த்தார். அதிர்ஷ்டவசமாக திரிபாதி தப்பினார். அடுத்து ஜோர்டன் வீசிய (7.2வது) பந்தை, 'மிட் விக்கெட்' பகுதியில் அடித்தார் திரிபாதி. அங்கு நின்றிருந்த கெய்ல், இடது புறமாக பாய்ந்து பந்தை பீல்டிங் செய்து கலக்கினார். இதை களத்துக்கு வெளியில் இருந்து பார்த்துக் கொண்டிருந்த கோல்கட்டா வீரர் ஆன்ட்ரி ரசலுக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை. முகத்தை கைகளால் மூடிக்கொண்டு சிரித்து மகிழ்ந்தார். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரல் ஆக பரவி வருகிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...