Dinamalar

கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்: வெளிநாட்டு வீரர்களுக்கு உதவும் பி.சி.சி.ஐ., ,  
 

கவலைப்படாதீங்க... நாங்க இருக்கோம்: வெளிநாட்டு வீரர்களுக்கு உதவும் பி.சி.சி.ஐ.,

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்கும் வெளிநாட்டு வீரர்கள் பத்திரமாக தாயகம் திரும்ப ஏற்பாடு செய்யப்படும் என பி.சி.சி.ஐ., உறுதி அளித்துள்ளது. இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மே 30ல் பைனல் நடக்க உள்ளது. தற்போது கொரோனா இரண்டாவது அலை வீசுவதால் வீரர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்தியாவின் அஷ்வின், ஆஸ்திரேலியாவின் ஆன்ட்ரூ டை, கேன் ரிச்சர்ட்சன் உட்பட 5 வீரர்கள் பாதியில் விலகினார். ஐ.பி.எல்., தொடரில் ஸ்டீவ் ஸ்மித், டிரண்ட் பவுல்ட், பட்லர், மொயீன் அலி, கெய்ல், பூரன் உள்ளிட்ட ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, விண்டீஸ் உட்பட பல வெளிநாட்டு வீரர்கள் விளையாடுகின்றனர்.

இந்நிலையில், கொரோனா காரணமாக மே 15 வரை இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. இதனால் தாயகம் திரும்ப முடியுமா என்ற அதிர்ச்சியில் ஆஸ்திரேலிய வீரர்கள் உள்ளனர். வெளிநாட்டு வீரர்களுக்கு இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) அதிகாரி ஹேமங் அமின் அனுப்பிய கடிதம்:

ஐ.பி.எல்., தொடர் முடிந்ததும், தாய்நாட்டுக்கு எப்படி திரும்புவது என்ற அச்சத்தில் பெரும்பாலான வீரர்கள் உள்ளனர். நீங்கள் எதை பற்றியும் கவலைப்பட வேண்டாம். உங்கள் சொந்த ஊர்களுக்கு எவ்வித தடையில்லாமல் திரும்ப பி.சி.சி.ஐ., அனைத்து விதத்திலும் உதவும். நிலைமையை உண்ணிப்பாக கண்காணித்து வருகிறோம். அரசு அதிகாரிகளுடன் பேசி, நீங்கள் தாயகம் திரும்ப அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்படும். பி.சி.சி.ஐ.,யை பொறுத்தவரை நீங்கள் ஒவ்வொருவரும் சொந்த நாடுகளுக்கு பத்திரமாக போய் சேர்ந்த பின்னரே ஐ.பி.எல்., தொடர் நிறைவடையும்.

இவ்வாறு கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



பிரதமர் கைவிரிப்பு

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறுகையில்,''ஆஸ்திரேலிய தொடருக்காக வீரர்கள் செல்லவில்லை. தனிப்பட்ட முறையில் சொந்த செலவில் இந்தியா சென்றனர். அதே முறையில் தாயகம் திரும்ப அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்,''என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...