Dinamalar

நடராஜனுக்கு ‘ஆப்பரேஷன்’ ,  
 

நடராஜனுக்கு ‘ஆப்பரேஷன்’

புதுடில்லி: தமிழக வேகப்பந்துவீச்சாளர் நடராஜனுக்கு முழங்கால் 'ஆப்பரேஷன்' நடந்தது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர், தமிழகத்தின் 'யார்க்கர்' நடராஜன் 30. கடந்த ஆண்டு எமிரேட்சில் நடந்த 13வது ஐ.பி.எல்., சீசனில் ஐதராபாத் அணிக்காக சிறப்பாக விளையாடிய இவர், ஆஸ்திரேலிய தொடரில் மூன்று வித போட்டியிலும் அறிமுகமானார். தாயகம் திரும்பிய இவர், தோள்பட்டை, முழங்கால் காயம் காரணமாக பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் மீண்டு வர தேவையான பயிற்சியில் ஈடுபட்டார். தற்போது இந்தியாவில் நடக்கும் 14வது ஐ.பி.எல்., சீசனில் ஐதராபாத் அணிக்காக 2 போட்டியில் மட்டும் பங்கேற்ற இவர், முழங்கால் காயத்தால் விலகினார்.

இந்நிலையில் நடராஜனின் முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இதுகுறித்து நடராஜன் 'டுவிட்டரில்' வெளியிட்டுள்ள செய்தியில், ''முழங்கால் காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டேன். சிறப்பாக கவனித்துக் கொண்ட அறுவை சிகிச்சை நிபுணர்கள், மருத்துவமனை ஊழியர்களுக்கு நன்றி. பி.சி.சி.ஐ., மற்றும் மீண்டு வர வாழ்த்தியவர்களுக்கு நன்றி,'' என, தெரிவித்திருந்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...