Dinamalar

புதிய ஐ.பி.எல்., சாம்பியன்: ரவி சாஸ்திரி நம்பிக்கை ,  
 

புதிய ஐ.பி.எல்., சாம்பியன்: ரவி சாஸ்திரி நம்பிக்கை

ஆமதாபாத்: ‛‛ஐ.பி.எல்., தொடரில் இம்முறை புதிய அணி கோப்பை வெல்லலாம்,'' என, ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி, ஒரு ரன் வித்தியாசத்தில் ரிஷாப் பன்ட் வழிநடத்தும் டில்லி அணியை வீழ்த்தியது. இதுகுறித்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தனது ‛டுவிட்டர்' பக்கத்தில் கோஹ்லி-ரிஷாப் பன்ட் இணைந்து இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛மிகச் சிறந்த போட்டி. இதன்மூலம் புதிய சாம்பியன் தோன்றுவதற்கு விதைகள் விதைக்கப்படுகின்றன,'' என, தெரிவித்திருந்தார். ஐ.பி.எல்., அரங்கில் இதுவரை மும்பை அணி அதிகபட்சமாக 5 முறை கோப்பை வென்றுள்ளது. அதன்பின் சென்னை (3 முறை), கோல்கட்டா (2), ராஜஸ்தான், டெக்கான், ஐதராபாத் அணிகள் தலா ஒரு முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றின. பெங்களூரு, டில்லி, பஞ்சாப் அணிகள் இதுவரை ஒரு முறை கூட கோப்பை வென்றதில்லை.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

செப்டம்பர் 27,2021 துபாய்: ''முதன்முறையாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை,'' என, ஹர்ஷல் படேல் தெரிவித்தார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு ...
பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

செப்டம்பர் 24,2021 அபுதாபி: ''பெங்களூரு, மும்பை அணிகளுக்கு எதிராக கிடைத்த வெற்றிக்கு பவுலர்களின் பங்களிப்பு முக்கியமானது,'' என, கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன் ...
அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

செப்டம்பர் 24,2021 புதுடில்லி: ''அஷ்வின் பயந்து பயந்து பந்து வீசுகிறார்,'' என சேவக் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14 வது ...