கேப்டன் கோஹ்லி ‘ஷாக்’ * ரசிகர்கள் ஆரவாரம் ,

ஆமதாபாத்: டில்லி அணிக்கு எதிரான போட்டியில் கோஹ்லியின் வித்தியாசமான முக பாவனை சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
பெங்களூரு, டில்லி அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி ஆமதாபாத் மோடி மைதானத்தில் நடந்தது. இப்போட்டியில் பெங்களூரு (171/5) இலக்கை துரத்திய டில்லி அணி (170/4) ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்ந்தது. இதில் 7வது ஓவரை பெங்களூரு வீரர் வாஷிங்டன் சுந்தர் வீசினார்.
இதன் முதல் பந்தில் ரிஷாப் பன்டுக்கு 'எல்.பி.டபிள்யு.,' அவுட் கொடுத்தார் அம்பயர். உடனடியாக 'டி.ஆர்.எஸ்.,' முறையில் அப்பீல் செய்தார் ரிஷாப். 'ரீப்ளேயில்' பந்து முதலில் ரிஷாப் பேட்டில் பட்டது தெரியவர, அவுட் திரும்பப் பெறப்பட்டது. அப்போது களத்தில் ராட்சத ஸ்கிரீனைப் பார்த்துக் கொண்டிருந்த பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, அப்படியே 'ஷாக்' ஆகிவிட்டார்.
ஏற்கனவே, இத்தொடரில் கோஹ்லியின் பல்வேறு முக பாவனைகள் ரசிகர்களால் பகிரப்பட்டு வரும் நிலையில், தற்போது 'ஷாக்' ஆன போட்டோவையும் ரசிகர்கள், சமூக வலைதளங்களில் 'மீம்ஸ்களாக' பறக்கவிட்டனர்.