Dinamalar

மீண்டு வருமா மும்பை * இன்று ராஜஸ்தானுடன் மோதல் ,  
 

மீண்டு வருமா மும்பை * இன்று ராஜஸ்தானுடன் மோதல்

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரின் இன்றைய லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் தற்போது நடக்கிறது. இதில் இன்று டில்லியில் நடக்கும் லீக் போட்டியில் மும்பை, ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. ஐந்து முறை கோப்பை வென்ற நடப்பு சாம்பியன் மும்பை அணி, இம்முறை பேட்டிங்கில் தொடர்ந்து தடுமாறுகிறது. முதல் 5 போட்டியில் 2ல் மட்டும் வென்றது.

கேப்டன் ரோகித் சர்மா (201 ரன்), சூர்யகுமார் யாதவ் (154) தவிர இஷான் கிஷான் (73), போலார்டு (65) என ஒருவரும் பெரியளவு ஸ்கோர் எடுக்கவில்லை. ஹர்திக் பாண்ட்யா 5 போட்டியில் 36 ரன் தான் எடுத்தார். பவுலிங்கில் ராகுல் சகார் அதிகபட்சம் 9 விக்கெட் கைப்பற்றியுள்ளார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டிரன்ட் பவுல்ட் (6), பும்ரா (4) கூடுதல் திறமை வெளிப்படுத்தினால் வெற்றிப் பாதைக்கு திரும்பலாம்.

ராஜஸ்தானை பொறுத்தவரையில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சர் என முன்னணி வீரர்கள் இல்லாமல் சஞ்சு சாம்சன் தலைமையில் தடுமாறுகிறது. 5 போட்டியில் 2ல் மட்டும் வென்றது. பேட்டிங்கில் சாம்சன் (187), துபே (110) தவிர வேறுயாரும் கைகொடுப்பதில்லை. பட்லர் (89), மில்லர் (88) ஏமாற்றம் தருகின்றனர். பந்து வீச்சில் 'ஆல் ரவுண்டர்' கிறிஸ் மோரிஸ் (9 விக்.,), இளம் வீரர் சக்காரியா (7) நம்பிக்கை தருகின்றனர்.

இன்று இரவு ஆமதாபாத்தில் நடக்கும் மற்றொரு போட்டியில் ரிஷாப் பன்டின் டில்லி, மார்கனின் கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...