Dinamalar

ராஜஸ்தான் ரூ.7.5 கோடி நிதியுதவி * கொரோனா நிவாரணத்துக்கு... ,  
 

ராஜஸ்தான் ரூ.7.5 கோடி நிதியுதவி * கொரோனா நிவாரணத்துக்கு...

புதுடில்லி: ராஜஸ்தான் அணி சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 7.5 கோடி வழங்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. சரியான நேரத்துக்கு ஆக்சிஜன் உள்ளிட்ட மருத்துவ உதவி கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர். இதற்கு உதவும் வகையில் ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணிக்காக விளையாடும் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் கம்மின்ஸ், ரூ. 37 லட்சம், முன்னாள் வீரர் பிரட் லீ (ஆஸி.,) ரூ. 41 லட்சம் வழங்கினர்.

தற்போது ராஜஸ்தான் அணி சார்பில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ. 7.5 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ராஜஸ்தான் அணி வெளியிட்ட அறிக்கை:

ராஜஸ்தான் அறக்கட்டளை, பிரிட்டிஷ் ஆசிய அறக்கட்டளையுடன் (பி.ஏ.டி.,) சேர்ந்து, ராஜஸ்தான் உரிமையாளர்கள், நிர்வாகிகள், வீரர்கள் நிதி திரட்டும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே, பி.ஏ.டி., அமைப்பு, இந்திய அரசுடன் இணைந்து கல்வி, திறன் மேம்படுத்துவது உட்பட பல்வேறு நிகழ்வுகளில் செயல்பட்டு வருகிறது.

தற்போது பி.ஏ.டி., நிறுவனர் பிரிட்டிஷ் 'பிரின்ஸ்' சார்லஸ், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களுக்கு உதவிடும் வகையில் 'ஆக்சிஜன் பார் இந்தியா' என்ற அவசரகால நிகழ்வைத் துவங்கியுள்ளார். இதன் ஒருபகுதியாக, காற்றில் இருந்து நேராக ஆக்சிஜனை வழங்கும் ஆக்சிஜன் செறிவூட்டுதல் கருவிகளை சேகரித்தல், அதை விநியோகிப்பதில் வழிகளில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக ராஜஸ்தான் அணி சார்பில் திரட்டப்பட்ட நிதி, ராஜஸ்தான் மாநிலம், இந்தியா முழுவதும் பயன்படுத்தப்படும். தற்போதுள்ள 'ஆக்சிஜன்' நெருக்கடியில் இருந்து இந்தியா மீள இது உதவியாக இருக்கும்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



டில்லி அணி ரூ. 1.5 கோடி

டில்லி அணி நிர்வாகம் சார்பில் கொரோனா நிவாரண நிதியாக ரூ. 1.5 கோடி தர முன்வந்துள்ளது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ தேவையான மருத்துவ கருவிகள், ஆக்சிஜன்சிலிண்டர்கள், அது தொடர்பான உபகரணங்கள் வாங்க பயன்படுத்தப்படும்.



'மிஷன்' ஆக்சிஜன்

கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வகையில் 250க்கும் மேற்பட்ட இளம் தொழிலதிபர்கள் இணைந்து 'மிஷன்' ஆக்சிஜன் என்ற அமைப்பை துவங்கியுள்ளனர். இதன் சார்பில் ஆக்சிஜன் செறிவூட்டும் கருவிகளை இறக்குமதி செய்து, நாடுமுழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கு வழங்க முன் வந்துள்ளனர்.

சமீபத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின், இந்த அமைப்புக்கு உதவி செய்துள்ளார். அவர் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'கிரிக்கெட் விளையாடிய போது, நீங்கள் கொடுத்த ஆதரவு வெற்றிகரமாக சாதிக்க உதவியது. இன்று நாம் அனைவரும் ஒருங்கிணைந்து இந்த கொரோனாவை விரட்ட போராடுவோம்.

'மிஷன்' ஆக்சிஜன் அமைப்புக்கு எனது பங்களிப்பை கொடுத்து உதவியுள்ளேன். இவர்களது முயற்சி, இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு மருத்துவமனைகளை விரைவில் சென்றடையும் என நம்புகிறேன்,' என தெரிவித்துள்ளார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...