Dinamalar

‘ரொம்ப பெருமையா இருக்கு’ * பிரித்விக்கு பிராச்சி பாராட்டு ,  
 

 ‘ரொம்ப பெருமையா இருக்கு’ * பிரித்விக்கு பிராச்சி பாராட்டு

ஆமதாபாத்: இந்திய கிரிக்கெட்டின் இளம் வீரர் பிரித்வி ஷா 21. ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார். கோல்கட்டாவுக்கு எதிரான லீக் போட்டியில் ஷிவம் மாவி வீசிய முதல் ஓவரில் தொடர்ந்து ஆறு பவுண்டரிகள் அடித்தார். ரகானேவுக்குப் பின் (2012) ஐ.பி.எல்., அரங்கில் இப்படி சாதித்த இரண்டாவது வீரர் ஆனார் பிரித்வி ஷா. இவருக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டுகள் குவிகின்றன. இவரது தோழி என்று கூறப்படும் 'டிவி' நடிகை பிராச்சி சிங்கும் 25, பாராட்டு தெரிவித்துள்ளார். பிரித்வி-பிராச்சி இடையே 'நட்பு' இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்ற போதும், ஏற்கனவே, 'பிரித்வி அழகாக உள்ளார்', 'உங்கள் சிரிப்பை இழக்கிறேன்,' என பல முறை பதில் அனுப்பியுள்ளார் பிராச்சி. தற்போது கோல்கட்டாவுக்கு எதிராக 'ஆட்ட நாயகன்' விருது வென்ற போட்டோவை தனது 'இன்ஸ்டாகிராமில்' வெளியிட்ட இவர், 'உன்னை நினைத்து ரொம்ப பெருமைப்படுகிறேன்,' என தெரிவித்துள்ளார்.

தவிர இப்போட்டியில் வென்ற பல்வேறு விருதுக்கான போட்டோக்களை மொத்தமாக வெளியிட்ட பிராச்சி,' இதெல்லாம் கொண்டு போக பிரித்விக்கு புதிய 'சூட்கேஸ்' வேண்டும் போல,' என காமெடி செய்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...