Dinamalar

முத்தான மூன்று விக்கெட்: ஹர்பிரீத் பிரார் உற்சாகம் ,  
 

முத்தான மூன்று விக்கெட்: ஹர்பிரீத் பிரார் உற்சாகம்

ஆமதாபாத்: ''கோஹ்லி, மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ் என, முத்தான மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றியதால் நான் ஆசிர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்,'' என, ஹர்பிரீத் பிரார் தெரிவித்துள்ளார். ஆமதாபாத்தில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பஞ்சாப் அணி (179/5, 20 ஓவர்) 34 ரன் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை (145/8, 20 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் 'சுழலில்' அசத்திய பஞ்சாப் வீரர் ஹர்பிரீத் பிரார், பெங்களூரு கேப்டன் கோஹ்லி, மேக்ஸ்வெல், டிவிலியர்ஸ் என, மூன்று முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து வெற்றிக்கு வித்திட்டார். நான்கு ஓவர் பந்துவீசிய இவர், 19 ரன் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் கைப்பற்றினார். இதில் ஒரு 'மெய்டன் ஓவர்' அடங்கும். கடந்த இரு ஐ.பி.எல்., சீசனில் 3 போட்டியில் விளையாடிய இவரால், ஒரு விக்கெட் கூட வீழ்த்த முடியவில்லை.

இதுகுறித்து ஹர்பிரீத் பிரார் கூறியது: இப்போட்டியில் டிவிலியர்சுக்கு எதிராக நிறைய 'டாட் பால்' வீச திட்டமிட்டேன். ஆனால் அவரை விரைவில் அவுட்டாக்கியது மகிழ்ச்சி. இதேபோல கோஹ்லிக்கு எதிராக துல்லியமாக பந்துவீச முடிவு செய்தேன். ஒருவேளை அவர், எனது பந்துகளை பவுண்டரிக்கு விரட்டினாலும் கவலைப்படக்கூடாது என்பதே எனது உத்தியாக இருந்தது. ஆனால் அவரை போல்டாக்கினேன்.

போட்டியில் நெருக்கடி இல்லாமல் எனது இயல்பான ஆட்டத்தை விளையாட விரும்பினேன். ஏனெனில் நெருக்கடியான நேரத்தில் சிறப்பாக செயல்பட முடியாமல் போனால் அது கூடுதல் மன அழுத்தமாக அமையலாம். வாய்ப்பு கிடைக்கும் போது அணியின் வெற்றிக்கு முயற்சிக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து விளையாடினேன். இதற்கு நல்ல பலன் கிடைத்தது.

இவ்வாறு பிரார் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

செப்டம்பர் 27,2021 துபாய்: ''முதன்முறையாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை,'' என, ஹர்ஷல் படேல் தெரிவித்தார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு ...
பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

செப்டம்பர் 24,2021 அபுதாபி: ''பெங்களூரு, மும்பை அணிகளுக்கு எதிராக கிடைத்த வெற்றிக்கு பவுலர்களின் பங்களிப்பு முக்கியமானது,'' என, கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன் ...
அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

செப்டம்பர் 24,2021 புதுடில்லி: ''அஷ்வின் பயந்து பயந்து பந்து வீசுகிறார்,'' என சேவக் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14 வது ...