யாருங்க பலசாலி... பாருங்க * கெய்ல்–சகால் ‘காமெடி’ ,

ஆமதாபாத்: கெய்ல், சகால் இருவரும் தங்களது 'ஜெர்சியை' கழற்றி விட்டு கொடுத்த 'போஸ்' ரசிகர்களுக்கு 'காமெடியாக' அமைந்துள்ளது.
பெங்களூரு, பஞ்சாப் அணிகள் மோதிய ஐ.பி.எல்., லீக் போட்டி ஐ தராபாத்தில் நடந்தது. இதில் பஞ்சாப் அணி, பெங்களூருவை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இதில் பஞ்சாப் வீரர் கெய்ல், 24 பந்தில் 6 பவுண்டரி, 2 சிக்சர் என 46 ரன்கள் விளாசினார். போட்டி முடிந்த பின் தனது 'ஜெர்சியை' கழற்றி, 'பாடி பில்டர்' போல 'போஸ்' கொடுத்தார் கெய்ல்.
இதைப் பார்த்துக் கொண்டிருந்த பெங்களூரு பவுலர் சகால், உடனடியாக தானும் அங்கு சென்று 'ஜெர்சியை' கழற்றிவிட்டு, கெய்ல் போல 'போஸ்' கொடுத்தார். இந்த போட்டோ சமூகவலைதளங்களில் வேகமாக பரவ, ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.
Advertisement
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!