Dinamalar

அஷ்வின் குடும்பத்தில் கொரோனா * மனைவி பிரித்தி சோகம் ,  
 

அஷ்வின் குடும்பத்தில் கொரோனா * மனைவி பிரித்தி சோகம்

சென்னை: அஷ்வின் குடும்பத்தில் பெரியவர்கள் 6 பேர், சிறுவர்கள் 4 பேர் என மொத்தம் 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின் 34. ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடினார். முதல் 5 போட்டியில் 1 விக்கெட் சாய்த்தார்.

சென்னையில் நடந்த ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பின், 14வது சீசன் போட்டிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த இவர், 'கொரோனாவால் போராடும் தனது குடும்பத்தினருக்கு ஆதரவாக இருக்கப் போகிறேன். சூழ்நிலை சரியானால் மீண்டும் ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்பேன்,' என தெரிவித்து இருந்தார்.

இதனிடையே அஷ்வின் மனைவி பிரித்தி, வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தி ரசிகர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது. இதன் விவரம்:

குடும்பத்தில் 6 பெரியவர்கள், 4 சிறுவர்கள் என ஒரே வாரத்தில் 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.

எங்கள் குழந்தைகளிடம் இருந்து தான் மற்றவர்களுக்கு பரவியுள்ளது. தற்போது உறவினர்கள் தங்கள்வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டும், வெவ்வேறு மருத்துவமனைகளிலும்சிகிச்சையில் உள்ளனர். மூன்று பேரில்,ஒரு பெற்றோர் வீடு திரும்பி விட்டார். மற்றபடி இது மிக கொடுமையான வாரம். 5 முதல் 8 என அந்த நான்கு நாட்கள் எனக்கு மிக மோசமாக இருந்தது. இதிலிருந்து உடலளவில் வேகமாக மீண்டாலும், மனதளவில் மீள்வது கடினம் தான் என நினைக்கிறேன்.

எல்லோரும் அங்கு இருந்தனர், உதவி செய்தனர், இருப்பினும் யாரும் உங்களுக்கு அருகில் இருக்க முடியாது, ஏனெனில் இது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டிய நோய். தயவுசெய்து உடனடியாக மருத்துவமனையை அணுகி உதவி பெறுங்கள்.அனைவரும் விரைவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். உங்கள் குடும்பங்கள் பாதுகாப்பாக இருக்க இதுதான் ஒரே வழி.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

முத்தான முதல் ‘ஹாட்ரிக்’: ஹர்ஷல் படேல் பெருமிதம்

செப்டம்பர் 27,2021 துபாய்: ''முதன்முறையாக 'ஹாட்ரிக்' சாதனை படைத்ததை விவரிக்க வார்த்தைகள் இல்லை,'' என, ஹர்ஷல் படேல் தெரிவித்தார். துபாயில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் பெங்களூரு ...
பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

பவுலர்கள் தந்த வெற்றி: இயான் மார்கன் பாராட்டு

செப்டம்பர் 24,2021 அபுதாபி: ''பெங்களூரு, மும்பை அணிகளுக்கு எதிராக கிடைத்த வெற்றிக்கு பவுலர்களின் பங்களிப்பு முக்கியமானது,'' என, கோல்கட்டா கேப்டன் இயான் மார்கன் ...
அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

அஷ்வின் பயம் ஏன் * சேவக் கணிப்பு

செப்டம்பர் 24,2021 புதுடில்லி: ''அஷ்வின் பயந்து பயந்து பந்து வீசுகிறார்,'' என சேவக் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடுகிறார் சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். 14 வது ...