Dinamalar

என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம் ,  
 

என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம்

புதுடில்லி: ''எனக்குப் பிடித்த இந்தியா, கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது,'' என பீட்டர்சன் தெரிவித்தார். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் பீட்டர்சன் 40. ஐ.பி.எல்., தொடரில் வர்ணனையாளராக இருந்தார். வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து, 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டது. இதுகுறித்து பீட்டர்சன் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதில்,''இந்தியாவை நான் மிகவும் நேசிக்கிறேன். தற்போது கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது எனது இதயம் வலிக்கிறது. இந்த கடினமான காலத்தை எதிர்கொண்டு, இதிலிருந்து விரைவில் வலிமையாக மீண்டு வருவீர்கள். இக்கட்டான இந்த காலத்திலும் உங்களது அன்பும், பெருந்தன்மையும் எப்போதும் கவனிக்கப்படாமல் போகாது,' என தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தோனி அழைப்பு... ரெய்னா வியப்பு

தோனி அழைப்பு... ரெய்னா வியப்பு

மே 19,2021 புதுடில்லி: ''ஐ.பி.எல்., தொடர் ஏலத்தில் சென்னை அணி என்னை வாங்கியது. இதை முதலில் தெரிவித்தது தோனி தான்,'' என ரெய்னா தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை கோப்பை ...
வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த

வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த

மே 09,2021 லண்டன்: ''உலக கோப்பை தொடர் காரணமாக, எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லை,''என இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் பட்ச்சர் தெரிவித்தார். இந்தியாவில் ...
இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்

இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்

மே 08,2021 லண்டன்: ''ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும்,'' என, பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ...