Dinamalar

வீட்டுக்கு வாங்க அப்பா * வார்னர் மகள் உருக்கம் ,  
 

வீட்டுக்கு வாங்க அப்பா * வார்னர் மகள் உருக்கம்

புதுடில்லி: ''உடனே கிளம்பி நேராக வீட்டுக்கு வாங்க அப்பா,'' என வார்னர் மகள் இவி மே வேண்டுகோள் விடுத்துள்ளார். ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தவர் ஆஸ்திரேலிய அணியின் வார்னர். முதல் 6 போட்டிகளில் ஒன்றில் மட்டும் வெற்றி பெற, வார்னர் நீக்கப்பட்டு வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அடுத்து நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் வார்னர் சேர்க்கப்படவே இல்லை.

தற்போது ஐ.பி.எல்., தொடர் ஒத்தி வைக்கப்பட்டது. இந்திய விமானங்களுக்கு ஆஸ்திரேலியா தடை விதித்துள்ளதால், வார்னர் மே 15க்குப் பிறகு தான் செல்ல முடியும். இதனிடையே வார்னர் மகள் இவி வரைந்த போட்டோவை தனது 'இன்ஸ்டாகிராம்' சமூகவலைதளத்தில் வெளியிட்டார். அதில்,' அப்பா, உடனே கிளம்பி நேராக வீட்டுக்கு வாங்க. நாங்கள் உங்களை அதிகமாக 'மிஸ்' செய்கிறோம்,' என எழுதியிருந்தார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...