Dinamalar

சூதாட்ட புக்கிகள் கைது * டில்லி போட்டியில் திருப்பம் ,  
 

சூதாட்ட புக்கிகள் கைது * டில்லி போட்டியில் திருப்பம்

புதுடில்லி: ஐ.பி.எல்., போட்டியின் போது சட்டவிரோதமாக மைதானத்துக்குள் நுழைந்த இரண்டு புக்கிகள் கைது செய்யப்பட்டனர். ஐ.பி.எல்., தொடரில் கடந்த மே 2ல் டில்லியில் நடந்த லீக் போட்டியில் ராஜஸ்தான் அணி (220/3), ஐ தராபாத்தை (165/8) வென்றது. இப்போட்டியின் போது கிரிஷன் கார்க், மணிஷ் கன்சால் என இரண்டு நபர்கள் அனுமதியில்லாமல் மைதானப்பகுதியில் முக்கிய நபர்கள் அமரும் வி.ஐ.பி., பகுதியில் சுற்றித் திரிந்தனர். முகத்தில் 'மாஸ்க்' அணியாமல் இருந்த இவர்களைக் கண்ட டில்லி காவல்துறை உதவி ஆய்வாளர் ஒருவர் விசாரித்துள்ளார். முன்னுக்குப் பின் முரணாக பதில் தெரிவித்தனர். அப்போது திடீரென இருவரும் அந்த இடத்தில் இருந்து ஓடத் துவங்கினர். போலீசார் துரத்தி பிடித்து, வழக்குப் பதிவு செய்தனர்.

இந்திய கிரிக்கெட் போர்டு ஊழல் தடுப்பு கண்காணிப்பு குழு தலைவர் ஷபிர் ஹுசைன் கூறுகையில்,''எங்கள் குழுவின் அதிகாரி ஒருவர், சந்தேகப்பட்ட நபரை பிடித்து விசாரித்த போது, அவர் இரு அலைபேசியை விட்டுவிட்டு தப்பிவிட்டார். போட்டி குறித்த தகவல்களை புக்கிகளிடம் பகிர்ந்து கொண்டிருக்கலாம். இதுகுறித்து டில்லி போலிசிடம் தெரிவித்தோம். உடனடியாக செயலில் இறங்கிய போலிசார், மைதானத்தில் இருவரை கைது செய்தது வரவேற்கத்தக்கது,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...