Dinamalar

வீடு திரும்பினார் கோஹ்லி * கிளம்பினர் இங்கிலாந்து வீரர்கள் ,  
 

வீடு திரும்பினார் கோஹ்லி * கிளம்பினர் இங்கிலாந்து வீரர்கள்

மும்பை: ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டதை அடுத்து கோஹ்லி உட்பட பல பெங்களூரு வீரர்கள் தங்களது வீடுகளுக்கு திரும்பினர். இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடந்தது. கொரோனா பாதுகாப்பு வளையத்தில் இருந்த வருண் சக்ரவர்த்தி உட்பட பல வீரர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா ஏற்பட, தொடர் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.

இதையடுத்து ஒவ்வொரு அணி வீரர்களும் தங்கள் வீடுகளுக்கு திரும்பி வருகின்றனர். ஆமதாபாத்தில் தங்கியிருந்த பெங்களூரு அணி வீரர்களுக்கு கொரோனா சோதனை நடத்தப்படுகிறது. இதில் 'நெகட்டிவ்' ஆக உள்ள வீரர்கள் மட்டும் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.

இதையடுத்து இந்திய அணி, பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, நேற்று மும்பையில் உள்ள வீட்டிற்கு திரும்பினார். முகத்தில் 'மாஸ்க்', தவிர கண்ணாடி 'ஷீல்டுடன்' வழக்கத்திற்கு மாறாக கைகளில் 'கிளவ்சுடன்' காணப்பட்டார். 'ரேஞ்ச் ரோவர்' காரில் இருந்து இறங்கி பொருட்களை வீடுகளுக்குள் எடுத்துச் செல்லும் படங்கள் நேற்று சமூக வலைதளங்களில் வேகமாக பரவின.

கோஹ்லி மனைவி அனுஷ்கா சர்மா வெளியிட்ட 'இன்ஸ்டாகிராம்' செய்தியில்,'ஐ.பி.எல்., ஒத்தி வைக்கப்பட்டதால் கோஹ்லி வீடு திரும்பினார். இனிமேல் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் இயக்கத்துக்கு ஆதரவு தெரிவிப்பதில் அதிக கவனம் செலுத்தலாம்,' என தெரிவித்துள்ளார்.



தாயகம் திரும்பினர்

இதேபோல ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்ற இங்கிலாந்து அணியின் பட்லர் (ராஜஸ்தான்), பேர்ஸ்டோவ் (ஐ தராபாத்), சாம் கர்ரான் (சென்னை), வோக்ஸ் (டில்லி) உட்பட 8 வீரர்கள் நேற்று இங்கிலாந்து திரும்பினர். இவர்கள் 10 நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்ட பிறகு, வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்படுவர். இங்கிலாந்து அணி கேப்டன் மார்கன் (கோல்கட்டா), டேவிட் மலான், ஜோர்டன் (பஞ்சாப்) என 3 வீரர்கள் அடுத்த 48 மணி நேரத்துக்குள் இங்கிலாந்து செல்லவுள்ளனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...