Dinamalar

பண்ணை வீட்டில் ஜடேஜா ,  
 

பண்ணை வீட்டில் ஜடேஜா

ஜாம்நகர்: ஐ.பி.எல்., தொடர் ரத்தானதால் சென்னை வீரர் ஜடேஜா, தனது பண்ணை வீட்டில் ஓய்வில் உள்ளார். இந்திய அணியின் ‛ஆல்-ரவுண்டர்' ரவிந்திர ஜடேஜா 32. ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக விளையாடுகிறார். சமீபத்தில், வீரர்களுக்கு ‛கொரோனா' தொற்று உறுதியானதால், 14வது ஐ.பி.எல்., சீசன் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து ஜடேஜா, குஜராத் மாநிலத்தில் உள்ள தனது பண்ணை வீட்டிற்கு சென்றார். அங்குள்ள குதிரைகளை பராமரித்து வரும் இவர், சவாரி செய்து வருகிறார். தனது குதிரைகளின் புகைப்படத்தை ‛டுவிட்டரில்' பதிவிட்டுள்ள ஜடேஜா வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛நான் மிகவும் பாதுகாப்பாக உணரும் இடத்துக்கு திரும்பிவிட்டேன்,'' என, தெரிவித்திருந்தார். கடந்த ஆண்டு நாடு முழுவதும் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருந்த போது, தனது பண்ணை வீட்டில் குதிரை சவாரி செய்த வீடியோவை ஜடேஜா ‛டுவிட்டரில்' பதிவிட்டிருந்தார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...