Dinamalar

விடாது துரத்தும் பி.சி.சி.ஐ., * லண்டனில் ஐ.பி.எல்., நடத்த முயற்சி ,  
 

விடாது துரத்தும் பி.சி.சி.ஐ., * லண்டனில் ஐ.பி.எல்., நடத்த முயற்சி

லண்டன்: ஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகளை லண்டனில் நடத்த பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. கோல்கட்டா அணியின் வருண் சக்ரவர்த்தி, சந்தீப், ஐதராபாத் வீரர் சகா, டில்லி அணியின் அமித் மிஸ்ரா என வீரர்களுக்கு கொரோனா ஏற்பட, ஐ.பி.எல்., தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே ஐந்து டெஸ்ட், ஒருநாள், 'டுவென்டி-20' தொடர்களில் பங்கேற்க இங்கிலாந்து செல்லும் இந்திய அணி, செப்., 14க்குப் பின் இந்தியா திரும்பும்.

அடுத்து இந்திய மண்ணில் அக்டோபர்-நவம்பரில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதனால் இடைப்பட்ட 20 நாட்களில் மீதமுள்ள 31 போட்டிகளை, எப்படியும் நடத்தி முடிக்க இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) திட்டமிட்டு வருகிறது. ஆனால் இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை, ஆண்டின் பின் பகுதியில் வரும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே இங்கிலாந்தின் மிடில்சக்ஸ், சர்ரே, வார்விக்சயர், லங்காஷயர் கவுன்டி அணிகள் மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த ஆர்வம் தெரிவித்துள்ளன. இதற்காக லண்டனில் உள்ள லார்ட்ஸ், ஓவல், எட்பாஸ்டன் (பர்மிங்காம்), ஓல்டு டிரபோர்டு (மான்செஸ்டர்) மைதானங்கள் தயாராக உள்ளதாக, இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு (இ.சி.பி.,) கடிதம் எழுதியுள்ளன.



உலக கோப்பைக்கு பயிற்சி

ஐ.பி.எல்., தொடரின் 31 போட்டிகள் எமிரேட்சில் நடந்தால் ஆடுகளங்கள் மந்தமாகி விடும். பிறகு 'டுவென்டி-20' உலக கோப்பை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டால், அதிக ரன்கள் குவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் லண்டனில் ஐ.பி.எல்., நடத்துவது குறித்து பி.சி.சி.ஐ., இ.சி.பி., இணைந்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலிடம் வரும் வாரம் பேசவுள்ளன. இது அனைத்து அணி வீரர்களுக்கும், உலக கோப்பை தொடருக்கான சிறந்த பயிற்சியாக அமையும் என நம்பப்படுகிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

மும்பை கலக்கல் பந்து வீச்சு * பஞ்சாப் அணி திணறல் பேட்டிங்

மும்பை கலக்கல் பந்து வீச்சு * பஞ்சாப் அணி திணறல் பேட்டிங்

செப்டம்பர் 28,2021 அபுதாபி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி பவுலர்கள் அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 20 ஓவரில் பஞ்சாப் 135/6 ரன் மட்டும் எடுத்தது. ஐ.பி.எல்., ...
பெங்களூரு வெற்றி தொடருமா * இன்று ராஜஸ்தானுடன் மோதல்

பெங்களூரு வெற்றி தொடருமா * இன்று ராஜஸ்தானுடன் மோதல்

செப்டம்பர் 28,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இன்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கின்றன. இன்று துபாயில் நடக்கும் லீக் ...
கோல்கட்டா அணிக்கு கொண்டாட்டம் *டில்லிக்கு ஏமாற்றம்

கோல்கட்டா அணிக்கு கொண்டாட்டம் *டில்லிக்கு ஏமாற்றம்

செப்டம்பர் 28,2021 சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோல்கட்டா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது. எமிரேட்சில் 14வது ஐ.பி.எல்., தொடரின் எஞ்சிய போட்டிகள் ...