Dinamalar

ஷிகர் தவானுக்கு தடுப்பூசி ,  
 

ஷிகர் தவானுக்கு தடுப்பூசி

புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பரவல் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளது. நாள் ஒன்றுக்கு 4 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்படுகின்றனர். மே 1 முதல் 18 வயதுக்கும் மேற்பட்ட அனைவருக்கும் கொரொனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் வேகமாக நடக்கின்றன. இதையடுத்து 'சீனியர் துவக்க வீரர் ஷிகர் தவான் 35, தடுப்பூசி செலுத்திக் கொண்டார். ஐ.பி.எல்., தொடரில் டில்லி அணிக்காக விளையாடிய இவர், இந்திய கிரிக்கெட்டில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட முதல் வீரர் ஆனார். இதற்கு முன் 45 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு முன்னுரிமை தரப்பட்ட போது, இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.

ஷிகர் தவான் வெளியிட்ட 'டுவிட்டர்' செய்தியில்,'அர்ப்பணிப்பு, தியாக உணர்வுடன் போராடி வரும் கொரோனா முன்களப் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி சொல்வது மட்டும் போதாது. தயவு செய்து முடிந்தவரை அனைவரும் தயங்காமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். கொரோனாவை வீழ்த்த இது ஒன்றுதான் உதவியாக இருக்கும்,' என தெரிவித்துள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

மும்பை கலக்கல் பந்து வீச்சு * பஞ்சாப் அணி திணறல் பேட்டிங்

மும்பை கலக்கல் பந்து வீச்சு * பஞ்சாப் அணி திணறல் பேட்டிங்

செப்டம்பர் 28,2021 அபுதாபி: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பை அணி பவுலர்கள் அசத்தல் பந்துவீச்சை வெளிப்படுத்தினர். 20 ஓவரில் பஞ்சாப் 135/6 ரன் மட்டும் எடுத்தது. ஐ.பி.எல்., ...
பெங்களூரு வெற்றி தொடருமா * இன்று ராஜஸ்தானுடன் மோதல்

பெங்களூரு வெற்றி தொடருமா * இன்று ராஜஸ்தானுடன் மோதல்

செப்டம்பர் 28,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் இன்று பெங்களூரு, ராஜஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கின்றன. இன்று துபாயில் நடக்கும் லீக் ...
கோல்கட்டா அணிக்கு கொண்டாட்டம் *டில்லிக்கு ஏமாற்றம்

கோல்கட்டா அணிக்கு கொண்டாட்டம் *டில்லிக்கு ஏமாற்றம்

செப்டம்பர் 28,2021 சார்ஜா: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய கோல்கட்டா அணி, 3 விக்கெட் வித்தியாசத்தில் டில்லியை வீழ்த்தியது. எமிரேட்சில் 14வது ஐ.பி.எல்., தொடரின் எஞ்சிய போட்டிகள் ...