Dinamalar

சென்னை அணி செயலுக்கு எதிர்ப்பு * பயிற்சியாளர்களை அழைத்தது சரியா ,  
 

சென்னை அணி செயலுக்கு எதிர்ப்பு * பயிற்சியாளர்களை அழைத்தது சரியா

சென்னை: கொரோனா பாதித்த பாலாஜி, மைக்கேல் ஹசியை விதிகளை மீறி சென்னை அழைத்து வந்ததற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்தியாவில் ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் நடந்தது. வருண் சக்ரவர்த்தி, சந்தீப், சகா, அமித் மிஸ்ரா, சென்னை அணி பவுலிங் பயிற்சியாளர், தமிழகத்தின் பாலாஜி, பேட்டிங் பயிற்சியாளர் மைக்கேல் ஹசிக்கு கொரோனா ஏற்பட்ட ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே சென்னை சார்பில் பாலாஜி, ஹசி இருவரும் தனித்தனி விமானங்களில் டில்லியில் இருந்து சென்னை அழைத்து வரப்பட்டு, சிகிச்சை தரப்படுகிறது. சென்னை அணியில் இந்தச் செயலுக்கு மற்ற அணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 'கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்களை 10 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். கடைசி இரு நாட்களில் நடக்கும் சோதனையில் தேற வேண்டும், தவிர எவ்வித அறிகுறியும் இல்லாமல் இருந்தால் மட்டுமே அறையை விட்டு வெளியேற வேண்டும்,' இந்திய கிரிக்கெட் போர்டு விதிகள் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து ஐ.பி.எல்., அணியின் அதிகாரி ஒருவர் கூறுகையில்,''கொரோனா பாதிப்பு ஏற்பட்ட இருவரை அறையை விட்டு எப்படி வெளியேற அனுமதித்தனர். அவர்களை அழைத்துச் சென்ற டிரைவர், விமானநிலைய பணியாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதே. பி.சி.சி.ஐ., விதிகள் மட்டுமல்ல அரசின் விதிகளும் தெளிவாக உள்ளன. ஆனால் ஐ.பி.எல்., தொடரின் ஒரு முன்னணி அணி எப்படி, இப்படிச் செய்யலாம்,'' எனக் கேட்டுள்ளார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...