Dinamalar

இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள் ,  
 

இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்

லண்டன்: ''ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும்,'' என, பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், வீரர்களுக்கு 'கொரோனா' உறுதியானதால் பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. மீதமுள்ள போட்டிகள் வரும் செப்டம்பர் மாதம் ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த சீசன் முழுமையாக எமிரேட்சில் நடந்தது. இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் 'ஆல்-ரவுண்டர்' கெவின் பீட்டர்சன், மீதமுள்ள போட்டிகளை இங்கிலாந்து மண்ணில் நடத்த விருப்பம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பீட்டர்சன் கூறியது: ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளை எமிரேட்சில் நடத்துவது குறித்து பேசுகின்றனர். ஆனால் இப்போட்டிகளை இங்கிலாந்தில் நடத்துவது சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனெனில் இங்கிலாந்து மண்ணில் வரும் செப்டம்பரில் இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் நிறைவடையும். இதனால் முன்னணி இந்திய வீரர்கள் இங்கு தான் இருப்பர். தவிர, இங்கிலாந்து வீரர்கள் முழுமையாக இத்தொடரில் பங்கேற்கலாம். தவிர இக்காலகட்டத்தில் போட்டிகளை நடத்துவதற்கு தேவையான தட்பவெப்பநிலை சரியாக இருக்கும். மான்செஸ்டர், லீட்ஸ், பர்மிங்காம், லண்டன் மைதானங்களில் போட்டிகளை நடத்தலாம். தவிர, ரசிகர்களுக்கும் அனுமதி வழங்கலாம். எனவே எமிரேட்ஸ், தென் ஆப்ரிக்காவை விட இங்கிலாந்தில் மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளை நடத்தலாம். இவ்வாறு பீட்டர்சன் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தோனி அழைப்பு... ரெய்னா வியப்பு

தோனி அழைப்பு... ரெய்னா வியப்பு

மே 19,2021 புதுடில்லி: ''ஐ.பி.எல்., தொடர் ஏலத்தில் சென்னை அணி என்னை வாங்கியது. இதை முதலில் தெரிவித்தது தோனி தான்,'' என ரெய்னா தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை கோப்பை ...
வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த

வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த

மே 09,2021 லண்டன்: ''உலக கோப்பை தொடர் காரணமாக, எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லை,''என இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் பட்ச்சர் தெரிவித்தார். இந்தியாவில் ...
என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம்

என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம்

மே 04,2021 புதுடில்லி: ''எனக்குப் பிடித்த இந்தியா, கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது,'' என பீட்டர்சன் தெரிவித்தார். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ...