Dinamalar

வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த ,  
 

வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த

லண்டன்: ''உலக கோப்பை தொடர் காரணமாக, எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லை,''என இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் பட்ச்சர் தெரிவித்தார். இந்தியாவில் 14வது ஐ.பி.எல்., தொடர் நடந்தது. இதில் பங்கேற்ற வருண் சக்ரவர்த்தி(கோல்கட்டா), சகா(ஐதராபாத்), அமித் மிஸ்ரா(டில்லி) உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட, தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது. இந்திய கிரிக்கெட் போர்டுக்கு(பி.சி.சி.ஐ.,) ரூ.2,500 கோடி வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனை ஈடு செய்யும் விதமாக, எஞ்சிய 31 போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து, இலங்கையில் நடத்த பி.சி.சி.ஐ., முயற்சித்து வருகிறது. இது குறித்து மார்க் பட்ச்சர் கூறியது: ஐ.பி.எல்., தொடரில் பணம் தான் முக்கியம். எஞ்சிய போட்டிகளை எப்படியாவது நடத்த பி.சி.சி.ஐ., முயற்சிக்கும். ஆனால் சர்வதேச கிரிக்கெட் அட்டவணை நெருக்கடியாக உள்ளது. வரிசையாக போட்டிகள் உள்ளன. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப், டெஸ்ட் தொடருக்காக இந்திய அணி,(ஜூன்-ஆகஸ்ட்) இங்கிலாந்து செல்ல உள்ளது. அடுத்து, இந்திய மண்ணில் அக்டோபர்-நவம்பரில் 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் நடக்க இருக்கிறது. உலக கோப்பை தொடரில் சாதிக்க அனைத்து அணி வீரர்களும் முன்கூட்டியே பயிற்சியில் ஈடுபட வேண்டும். முன்பு மாதிரி விமான பயணத்தோடு முடிந்து விடாது. இப்போது பாதுகாப்பு விதிகளின்படி வீரர்கள் தனிமைப்படுத்த வேண்டும். கிரிக்கெட் அட்டவணை, போக்குவரத்து சிக்கல், தனிமைப்படுத்துதல் என நிறைய பிரச்னைகள் இருப்பதால், எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளை இந்த ஆண்டு நடத்த வாய்ப்பு இல்லை. இவ்வாறு மார்க் பட்ச்சர் கூறினார். கங்குலிக்கு கடினம்

பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலி கூறுகையில்,''ரசிகர்கள் இல்லாமல் ஐ.பி.எல்., தொடர் நன்றாக தான் சென்றது. சென்னை, மும்பையில் பாதுகாப்பு விதிகள் மீறப்படவில்லை. டில்லி, ஆமதாபாத்தில் பிரச்னை ஏற்பட்டது. இங்கிலீஷ் பிரிமியர் லீக் கால்பந்தில் சில வீரர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனாலும், அட்டவணையில் மாற்றம் செய்து, போட்டியை தொடர்ந்தனர். ஐ.பி.எல்., தொடரில் ஒரு வாரம் நிறுத்தினாலும் சிக்கல் ஏற்படுகிறது. தனிமைப்படுத்துதல் கடினமாக உள்ளது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஜூன் 22ல் முடிந்த பிறகு, எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளை இந்தியாவில் நடத்த வாய்ப்பு இல்லை. ஏனெனில் 'உலக' சவால் முடிந்ததும் 3 ஒருநாள், 5 'டுவென்டி-20' போட்டிகளில் பங்கேற்க இந்திய அணி, இலங்கை செல்கிறது. எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளை எப்போது நடத்துவது என்பதை இப்போதே கணிப்பது கடினம்,''என்றார்.



உலக கோப்பை சிக்கல்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவான் இயான் சாப்பல் கூறுகையில்,''கிரிக்கெட் வரலாற்றில் பல பிரச்னைகளால் முக்கிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இப்போது கொரோனா காரணமாக ஐ.பி.எல்., தொடர் ஒத்திவைக்கப்பட்டதை முன்னுதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் அடிப்படையில் இந்தியாவில் நடக்க உள்ள 'டுவென்டி-20' உலக கோப்பை தொடர் ஒத்திவைக்கப்படலாம் அல்லது வேறு இடத்துக்கு மாற்றப்படலாம்,''என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தோனி அழைப்பு... ரெய்னா வியப்பு

தோனி அழைப்பு... ரெய்னா வியப்பு

மே 19,2021 புதுடில்லி: ''ஐ.பி.எல்., தொடர் ஏலத்தில் சென்னை அணி என்னை வாங்கியது. இதை முதலில் தெரிவித்தது தோனி தான்,'' என ரெய்னா தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை கோப்பை ...
இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்

இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்

மே 08,2021 லண்டன்: ''ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும்,'' என, பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ...
என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம்

என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம்

மே 04,2021 புதுடில்லி: ''எனக்குப் பிடித்த இந்தியா, கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது,'' என பீட்டர்சன் தெரிவித்தார். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ...