Dinamalar

வருவார்களா இங்கிலாந்து வீரர்கள்: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க ,  
 

வருவார்களா இங்கிலாந்து வீரர்கள்: ஐ.பி.எல்., தொடரில் பங்கேற்க

லண்டன்: ஐ.பி.எல்., தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்பது சந்தேகம் என்று கூறப்படுகிறது. இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., சீசன் நடந்தது. வீரர்களுக்கு 'கொரோனா' தொற்று உறுதியானதால் காலவரையின்றிஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து இத்தொடரில் பல்வேறு அணிகள் சார்பில் பங்கேற்ற வெளிநாட்டுவீரர்கள் தாயகம் திரும்பினர். மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகளைஐ.சி.சி., 'டுவென்டி-20' உலக கோப்பை தொடருக்கு முன், வரும் செப்டம்பரில் நடத்த இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) முயற்சித்து வருகிறது. ஒருவேளை இக்காலகட்டத்தில் ஐ.பி.எல்., தொடர் நடத்தப்பட்டால், சர்வதேச அட்டவணை காரணமாக இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் போர்டின் நிர்வாக இயக்குனர் ஆஷ்லே கில்ஸ் கூறுகையில், ''மீதமுள்ள ஐ.பி.எல்., போட்டிகள் எப்போது நடத்தப்படும் என்று தெரிய வில்லை. ஒருவேளை வரும் செப்டம்பரில் நடத்தப்பட்டால் சர்வதேச அட்டவணை காரணமாக இங்கிலாந்து வீரர்கள் பங்கேற்க மாட்டார்கள். ஏனெனில் அப்போது வங்கதேசம், பாகிஸ்தான் செல்லும் இங்கிலாந்து அணி, அதன்பின் 'டுவென்டி-20' உலக கோப்பை, ஆஷஸ் டெஸ்ட் தொடர்களுக்கு தயாராக வேண்டியுள்ளது. தற்போது நாடு திரும்பிய எங்கள் வீரர்கள் ஓட்டலில் 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களை, தலைமை பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட், எங்கள் மருத்துவ குழுவினர்கண்காணித்து வருகின்றனர்,'' என்றார். இம்முறை இங்கிலாந்து சார்பில் மொயீன் அலி, சாம் கர்ரான், இயான் மார்கன், ஜோஸ் பட்லர், கிறிஸ் வோக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ் உள்ளிட்டோர்பங்கேற்றனர்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

மே 31,2021 | 5 comments துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா ...
ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...