Dinamalar

தோனி அழைப்பு... ரெய்னா வியப்பு ,  
 

தோனி அழைப்பு... ரெய்னா வியப்பு

புதுடில்லி: ''ஐ.பி.எல்., தொடர் ஏலத்தில் சென்னை அணி என்னை வாங்கியது. இதை முதலில் தெரிவித்தது தோனி தான்,'' என ரெய்னா தெரிவித்தார்.

ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை கோப்பை வென்றது தோனியின் சென்னை அணி (2010, 2011, 2018). இந்த அணியின் துணைக் கேப்டன் ரெய்னா. இதுவரை 200 போட்டிகளில் 5,491 ரன்கள் எடுத்த இவர், ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன் எடுத்தவர்களில் மூன்றாவது இடத்தில் உள்ளார்.

இத்தொடர் துவங்கியது போது (2008), ரெய்னாவுக்கு அடிப்படை ஏலத் தொகை ரூ. 55 லட்சமாக இருந்தது. கடைசியில் ரூ. 2.6 கோடி கொடுத்து சென்னை வாங்கியது. கடந்த சீசனில் தொடர் துவங்கும் முன், தனிப்பட்ட காரணங்களுக்காக திடீரென எமிரேட்சில் இருந்து நாடு திரும்பினார்.

இம்முறை 14வது சீசனில் 7 போட்டிகளில் 123 ரன்கள் எடுத்த ரெய்னா, 'பிலீவ்' (நம்புங்கள்) என்ற பெயரில் தனது சுயசரிதை எழுதுகிறார். இதில் ரெய்னா கூறியவை:

முதன் முதலில் ஐ.பி.எல்., தொடர் ஏலம் நடந்தது. அனைத்து வீரர்களைப் போல நானும், எந்த அணிக்காக விளையாடப் போகிறோம் என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக காத்திருந்தேன். கடைசியில் சென்னை அணி என்னை வாங்கியது என அறிந்ததும் மகிழ்ச்சி அடைந்தேன். ஏனெனில், தோனியும், நானும் ஒரே அணியில் விளையாடப் போகிறோம் அல்லவா.

தவிர, உடனடியாக என்னை அழைத்த தோனி, 'சென்னை அணிக்காக வாங்கப்பட்டதாக' தெரிவித்தார். நான் விளையாடுவதை பார்க்க ஆவலாக இருப்பேன்,' என்றார்.

இந்த ஏலத்தில் ஹைடன், பிளமிங், முரளிதரன் என பல பிரபல வீரர்களை சென்னை அணி வாங்கியது. இவர்களுடன் நானும் இணைந்து விளையாடியது உற்சாகமாக இருந்தது. இந்த ஐ.பி.எல்., தொடர் தான், எனக்கும், தோனிக்கும் இடையிலான நட்பை பலப்படுத்தியது.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த

வாய்ப்பு இல்ல ராஜா: ஐ.பி.எல்., தொடரை நடத்த

மே 09,2021 லண்டன்: ''உலக கோப்பை தொடர் காரணமாக, எஞ்சிய ஐ.பி.எல்., போட்டிகளை நடத்த வாய்ப்பு இல்லை,''என இங்கிலாந்து முன்னாள் வீரர் மார்க் பட்ச்சர் தெரிவித்தார். இந்தியாவில் ...
இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்

இங்கிலாந்தில் ஐ.பி.எல்., தொடர்: பீட்டர்சன் வேண்டுகோள்

மே 08,2021 லண்டன்: ''ஒத்திவைக்கப்பட்ட ஐ.பி.எல்., தொடருக்கான மீதமுள்ள போட்டிகளை இங்கிலாந்தில் நடத்த வேண்டும்,'' என, பீட்டர்சன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் நடந்த 14வது ...
என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம்

என் இதயம் வலிக்கிறது * பீட்டர்சன் உருக்கம்

மே 04,2021 புதுடில்லி: ''எனக்குப் பிடித்த இந்தியா, கொரோனாவால் அவதிப்படுவதை பார்க்கும் போது இதயம் வலிக்கிறது,'' என பீட்டர்சன் தெரிவித்தார். இங்கிலாந்து அணி முன்னாள் கேப்டன் ...