Dinamalar

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி ,  
 

குழப்பத்தின் உச்சத்தில் ஐ.பி.எல்., * அட்டவணை அறிவிப்பதில் இழுபறி

துபாய்: ஐ.பி.எல்., போட்டிகளை மீண்டும் நடத்துவதில் சிக்கல் நீடிக்கிறது. அட்டவணையை அறிவிக்க முடியாமல் பி.சி.சி.ஐ., தவிக்கிறது. இந்தியாவில் நடந்த 14வது ஐ.பி.எல்., தொடர், கொரோனா பரவல் காரணமாக பாதியில் ஒத்திவைக்கப்பட்டது. லாபத்தை மட்டும் குறிக்கோளாக கொண்ட பி.சி.சி.ஐ., எஞ்சிய போட்டிகளை எப்படியாவது எமிரேட்சில் நடத்த முயற்சிக்கிறது. செப் 19-அக். 10 வரை போட்டிகளை நடத்த திட்டமிட்டுள்ளது. இது குறித்து பேச பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா, செயலர் ஜெய் ஷா உட்பட நான்கு பேர் தனி விமானத்தில் எமிரேட்ஸ் பறந்துள்ளனர். இருப்பினும் அட்டவணையை இறுதி செய்வதில் சிக்கல்கள் நீடிக்கின்றன. ஏனெனில் இதே காலக்கட்டத்தில் உலகில் பல்வேறு தொடர்கள் நடக்க உள்ளன. விண்டீசில் கரீபியன் பிரிமியர் லீக்(ஆக. 28-செப்.19) நடக்க உள்ளது. இத்தொடரை 7-10 நாட்கள் முன்னதாக நடத்தும்படி பி.சி.சி.ஐ., கேட்டுக் கொண்டுள்ளது. தவிர, சர்வதேச கிரிக்கெட் அட்டவணையும் 'பிசி'யாக உள்ளது. ஆஸ்திரேலிய அணி, வங்கதேசம் செல்ல உள்ளது. நியூசிலாந்து அணி, வங்கதேசம் மற்றும் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாட இருக்கிறது. இங்கிலாந்தும் பாகிஸ்தான், வங்கதேசத்துக்கு எதிராக விளையாட உள்ளது. பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் தொடரும் நடக்க உள்ளது. தாய் நாட்டுக்கு முன்னுரிமை அளித்து ஐ.பி.எல்., தொடரை முன்னணி வீரர்கள் புறக்கணிக்கலாம். வெளிநாட்டு வீரர்கள் இல்லாமல் நடத்தினால், ஐ.பி.எல்., போட்டிகளில் சுவாரஸ்யம் இருக்காது. இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் பி.சி.சி.ஐ., விழிக்கிறது. ரசிகர்கள் அனுமதி

எமிரேட்சில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு விட்டது. இதனால் ஐ.பி.எல்., போட்டிகளை நேரடியாக காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படலாம்.



பிடிவாதம்

பி.சி.சி.ஐ., துணைத் தலைவர் ராஜிவ் சுக்லா கூறுகையில்,''எங்களது நோக்கம் ஐ.பி.எல்., தொடரை நடத்துவது தான். 20 நாட்களுக்குள் போட்டிகளை முடித்துவிடுவோம். வெளிநாட்டு வீரர்களுடன் பேசி வருகிறோம். அன்னிய வீரர்கள் வருபவர்கள் வரட்டும், வராதவர்களுக்காக ஐ.பி.எல்., தொடரை நிறுத்தப் போவதில்லை,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து (5)
Ramesh - Thirunagar,இந்தியா
20 ஜூலை,2021 - 16:54 Report Abuse
Ramesh Nandru
5 0
praba - madurai,இந்தியா
20 ஜூலை,2021 - 14:12 Report Abuse
praba IPL வேண்டாம்
6 2
Ramesh - Thirunagar,இந்தியா
20 ஜூலை,2021 - 16:14Report Abuse
Ramesharumai
3 3
Madhu Kumaran - Thiruvannamalai,இந்தியா
22 ஜூலை,2021 - 13:42Report Abuse
Madhu KumaranOkk
0 0
Madhu Kumaran - Thiruvannamalai,இந்தியா
22 ஜூலை,2021 - 13:42Report Abuse
Madhu KumaranHeee heee
0 0

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

ஆஸ்திரேலியா புறப்பட்டார் மைக்கேல் ஹசி

மே 16,2021 சென்னை: 'கொரோனா' தொற்றில் இருந்து தேறிய மைக்கேல் ஹசி, ஆஸ்திரேலியாவுக்கு புறப்பட்டார். ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் ஹசி 45. ஐ.பி.எல்., தொடருக்கான ...
தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

தேறினார் மைக்கேல் ஹசி: விரைவில் நாடு திரும்புகிறார்

மே 14,2021 புதுடில்லி: முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, 'கொரோனா' தொற்றில் இருந்து தேறியதால் விரைவில் சொந்த ஊருக்கு திரும்புவார் என்று ...
மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல்

மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல்

மே 13,2021 சென்னை: ஆஸ்திரேலியா செல்வதில் மைக்கேல் ஹசிக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கொரோனா காரணமாக 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இத்தொடரில் ...