ரோகித் சர்மாவுக்கு என்னாச்சு ,

துபாய்: மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா முழங்கால் காயத்தால் அவதிப்படுகிறார்.
ஐ.பி.எல்., தொடரில் மும்பை அணிக்கு ஐந்து முறை கோப்பை வென்று தந்தவர் ரோகித் சர்மா 34. எமிரேட்சில் நடக்கும் 14 வது சீசன் தொடரில் சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்கவில்லை. இது ரசிகர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியது. இவருக்குப் பதில் போலார்டு கேப்டனாக செயல்பட்டார். அன்மோல்பிரீத் சிங் அறிமுகம் ஆனார்.
இதனிடையே இங்கிலாந்து தொடரில் ரோகித் சர்மா முழங்கால் காயத்தால் அவதிப்பட்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து மும்பை பயிற்சியாளர் ஜெயவர்தனா கூறியது:
இங்கிலாந்தில் இருந்து திரும்பிய பின் பேட்டிங், ஓட்டப் பயிற்சியில் ஈடுபட்டார். மற்றபடி இன்னும் சில நாட்கள் அவர் ஓய்வில் இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்ததால், சென்னை அணிக்கு எதிராக களமிறங்கவில்லை. அடுத்து செப். 23ல் கோல்கட்டாவுக்கு எதிரான போட்டிக்கு தயாராகி விடுவார். அதேபோல ஹர்திக் பாண்ட்யாவும் சிறிய காயத்தில் உள்ளார். இவருக்கு கூடுதலாக ஓய்வு கொடுத்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.