Dinamalar

‘வெல்கம்’ வெங்கி * ஐ.பி.எல்., அரங்கின் புது நாயகன் ,  
 

 ‘வெல்கம்’ வெங்கி * ஐ.பி.எல்., அரங்கின் புது நாயகன்

அபுதாபி: ஐ.பி.எல்., தொடரின் புது நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் வெங்கடேஷ். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் தற்போது நடக்கிறது. இதன் லீக் போட்டியில் கோல்கட்டா அணி, பெங்களூருவை சாய்த்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்தது. இப்போட்டியில் ஐ.பி.எல்., அரங்கில் அறிமுக வாய்ப்பு பெற்றார் மத்திய பிரதேசத்தின் வெங்கடேஷ் ஐயர் 26(செல்லமாக வெங்கி). இந்துாரை சேர்ந்த இவர் கோல்கட்டா அணிக்கு துவக்க வீரராக களமிறங்கி 27 பந்தில் 41 ரன் எடுத்து வெற்றிக்கு கைகொடுத்தார்.

படிப்பில் ரொம்ப கெட்டி. பெற்றோர் விருப்பப்படி பி.காம்., படித்த இவர், சி.ஏ., இடைநிலைத் தேர்வில் அசத்த, கிரிக்கெட்டை விட்டுவிடும் நிலை ஏற்பட்டது. தனியார் நிறுவத்தில் கிடைத்த பெரிய வேலையை உதறிவிட்டு, 2018ல் ரஞ்சி தொடரில் அறிமுகம் ஆனார். வேகப்பந்து வீச்சு 'ஆல் ரவுண்டரான' இவர், 23 வயது மத்திய பிரதேச அணி கேப்டனாக இருந்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான விஜய் ஹசாரே போட்டியில் 149 பந்தில் 198 ரன் விளாசினார்.

புத்தகங்கள் படிப்பது, சமையல் நிகழ்ச்சிகள், சினிமா பார்ப்பது, வெங்கடேஷிற்கு பிடிக்கும். தவிர ரஜினியின் ரசிகர். படையப்பா படத்தில் வரும் 'என் வழி... தனி வழி' டயலாக் பிடிக்குமாம்.



மோர்கன் பாராட்டு

கோல்கட்டா அணி கேப்டன் இயான் மோர்கன் கூறுகையில், 'அறிமுக வீரராக களமிறங்கிய வெங்கடேஷ் விளையாடிய விதம் சிறப்பாக இருந்தது. இதுபோல திறமையான வீரர்கள் பலர் எங்கள் அணியில் உள்ளனர். தொடரில் செல்ல வேண்டிய துாரம் நிறைய உள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் இது போல பேட்டிங், பவுலிங்கில் ஆதிக்கம் செலுத்தினால் புள்ளிப்பட்டியலில் முன்னேறலாம். ஐ.பி.எல்., வரலாற்றில் ஏற்கனவே இதே போல மீண்டு வந்த அனுபவம் உள்ளது,''என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...