Dinamalar

ரூ.30,000 கோடி * ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமம் பெற ,  
 

ரூ.30,000 கோடி * ஐ.பி.எல்., ஒளிபரப்பு உரிமம் பெற

புதுடில்லி: ஐ.பி.எல்., 'டி.வி' ஒளிபரப்பு உரிமம், அடுத்த 5 ஆண்டுக்கு ரூ. 30,000 கோடியை எட்ட உள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், கடந்த 2008ல் இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) 'டுவென்டி-20' கிரிக்கெட் தொடர் துவங்கப்பட்டது. இதற்கான 'டிவி' நேரடி ஒளிபரப்பு உரிமத்தை பெற்ற சோனி நிறுவனம் முதல் ஆண்டில் ரூ. 460 கோடி கொடுத்தது. 2009 முதல் ஆண்டுக்கு ரூ. 900 கோடி கொடுத்தது.

அடுத்து வந்த ஸ்டார் நிறுவனம் கடந்த ஐந்தாண்டுக்கு ரூ. 16,347.50 கோடி கொடுத்தது. தற்போது அடுத்த சீசனில் புதியதாக இரு அணிகள் சேர்க்கப்பட உள்ளதால் போட்டிகள் எண்ணிக்கை 74 அல்லது 94 ஆக அதிகரிக்கும். இதனால் இந்த ஆண்டு இறுதியில் அல்லது 2022 துவக்கத்தில் நடக்கவுள்ள 'டி.வி' ஒளிபரப்பு உரிம ஏலம் களை கட்டவுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுக்கான மதிப்பு, ஏலத்தின் வெற்றியை பொறுத்து எப்படியும் ரூ. 30,000 கோடி முதல் ரூ. 40,000 கோடி வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்டார் நிறுவனத்துடன் சோனி, விஸ்காம் 18, ரிலையன்ஸ் என மூன்று முன்னணி நிறுவனங்கள் உரிமையை பெற போட்டியிட உள்ளன.

அதேபோல உலகளவில் விளையாட்டு போட்டிகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் முன்னேற்றம் அடைந்துள்ள அமேசான் நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளது.

டிரிபிள்காம் மீடியா நிறுவனர், தலைமை செயல் அதிகாரி குணால் தாஸ்குப்தா கூறுகையில்,''இம்முறை ஏலத் தொகை 50 சதவீதம் அதிகரித்து ரூ. 24,000 கோடியாக வாய்ப்புள்ளது. இதை ஒரே நிறுவனம் தட்டிச் செல்லும் என நினைக்கவில்லை.

தவிர 2 புதிய அணிகள் சேர்ப்பதால், அடுத்த ஆண்டு போட்டி எண்ணிக்கை 94 ஆக அதிகரிக்கலாம். இதனால் ஐ.பி.எல்., 'மீடியா', ஒளிபரப்பு உரிமம் ரூ. 30,000 கோடி முதல் ரூ. 40,000 கோடி வரை உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சகாருக்கு தோனி ‘ஐடியா’

சகாருக்கு தோனி ‘ஐடியா’

அக்டோபர் 08,2021 துபாய்: தோனி கொடுத்த 'ஐடியா' காரணமாக, தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார் சகார். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் ...
வரமாக வருவாரா வருண்... *காயம் சாபம் தீருமா

வரமாக வருவாரா வருண்... *காயம் சாபம் தீருமா

அக்டோபர் 05,2021 துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடரில் சாதிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்திக்கு, முழங்கால் காயம் தொல்லையாக உள்ளது. ஐ.சி.சி., உலக கோப்பை 'டி-20' தொடர்(அக்.17--நவ.14) ...
ஐ.பி.எல்., அணி விலை ரூ. 4000 கோடி

ஐ.பி.எல்., அணி விலை ரூ. 4000 கோடி

அக்டோபர் 05,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் இணையவுள்ள ஒரு அணியின் மதிப்பு ரூ. 3000 முதல் ரூ. 4000 கோடி வரை இருக்கலாம். ஐ.பி.எல்., தொடரில் சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ...