Dinamalar

‘வயசானாலும்’ சென்னை ‘ஸ்டைல்’ மாறல! ,  
 

‘வயசானாலும்’ சென்னை ‘ஸ்டைல்’ மாறல!

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் மூன்று முறை சாம்பியன் ஆன நம்ம சென்னை அணியை அசைக்க முடியவில்லை. 'டாடிஸ் ஆர்மி' என கேலி செய்தவர்களுக்கு கேப்டன் தோனி, பிராவோ உள்ளிட்ட அனுபவ வீரர்கள் சரியான பதிலடி கொடுக்கின்றனர். வயது என்பது வெறும் நம்பர் தான். 'ஓல்டு இஸ் கோல்டு' என்பதை களத்தில் நிரூபிக்கின்றனர். ஐக்கிய எமிரேட்சில் 14வது ஐ.பி.எல்., தொடரின் எஞ்சிய போட்டிகள் நடக்கின்றன. மும்பைக்கு எதிரான முதல் லீக் போட்டியில் துவக்கத்தில் தடுமாறிய சென்னை அணி 4 விக்கெட்டுக்கு 24 ரன் எடுத்திருந்தது. பின் ருதுராஜ் கைகொடுக்க, 156 ரன்களையே எடுத்தது. இந்த இலக்கை மும்பை எளிதாக எட்ட வாய்ப்பு இருந்தது.

கலக்கல் வியூகம்

ஆனால், சென்னை கேப்டன் தோனியின் வியூகம் திருப்புமுனை ஏற்படுத்தியது. இஷான் கிஷான், சவுரப் திவாரி சேர்ந்து மும்பை அணியை கரை சேர்க்க பார்த்தனர். இதனை புரிந்து கொண்ட தோனி 'பீல்டிங்கை' மாற்றினார். 'கவர்' திசையில் இருந்த ரெய்னாவை 'ஷார்ட் கவர்' திசையில் நிற்க சொன்னார். பின் டுவைன் பிராவோவை பந்துவீச அழைத்தார். இப்போது இஷான் அடித்த பந்து ரெய்னாவிடம் கச்சிதாக 'கேட்ச்' ஆக, மும்பை மீள முடியவில்லை. சென்னை அணி சுலபமாக வெற்றியை வசப்படுத்தியது.

கடந்த முறை லீக் சுற்றுடன் நடையை கட்டிய சென்னை அணி இம்முறை அசத்துகிறது. 8 போட்டியில் 6 வெற்றிகளுடன் முதலிடத்தில் உள்ளது. அணியில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. வயதான வீரர்கள் தான் அதிகம் உள்ளனர். மொத்தம் உள்ள 26 பேரில் 2 பேர் 40 வயதை எட்டியவர்கள். 12 பேர் 30களிலும், 12 பேர் 20களிலும் உள்ளனர். கேப்டன் தோனிக்கு வயது 40. அணியின் மூத்த வீரராக இம்ரான் தாகிர் 42, உள்ளார். பிராவோ(37), டுபிளசி(37), ராயுடு(35), உத்தப்பா(35), ரெய்னா(34), மொயீன் அலி(34), புஜாரா(33), கரண் சர்மா(33), ரவிந்திர ஜடேஜா(32) என பெரும்பாலனவர்கள் அனுபவ வீரர்களே.

அனுபவம் சாதகம்

ரசிகர்களால் 'தல' என செல்லமாக அழைக்கப்படும் தோனி தான் சென்னை அணியின் பலம். 212 ஐ.பி.எல்., போட்டிகளில் 23 அரைசதம் உட்பட 4672 ரன் எடுத்துள்ளார். 'ஹெலிகாப்டர் ஷாட்' மூலம் 'சிக்சர்' அடிப்பது, மின்னல் வேக 'கீப்பிங்', சாதுர்யமான 'பீல்டிங்' வியூகம் என பல கலைகள் தெரிந்தவர். அணியை இக்கட்டான கட்டத்தில் இருந்து மீட்கும் 'சின்ன தல' ரெய்னா 39 அரைசதம், ஒரு சதம் உட்பட 5,495 ரன் (201 போட்டி) குவித்துள்ளார். விண்டீஸ் ஆல்-ரவுண்டர் டுவைன் பிராவோ 145 போட்டிகளில் 1,533 ரன், 159 விக்கெட் வீழ்த்தியுள்ளார். துவக்க வீரராக தென் ஆப்ரிக்காவின் டுபிளசி (92 போட்டி, 2622 ரன்) அசத்துகிறார். முக்கியமான நேரத்தில் தென் ஆப்ரிக்க 'சுழல்' நாயகன் இம்ரான் தாகிர்(59 போட்டி, 82 விக்கெட்) கைகொடுக்கிறார். ஜடேஜா, ராயுடு, ருதுராஜ் போன்றவர்களும் நம்பிக்கை அளிக்கின்றனர்.

சென்னை அணி தனது அடுத்த போட்டியில் பெங்களூருவை(செப். 24) சந்திக்கிறது. இதிலும் தோனி படையின் சாகசம் தொடரலாம்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சகாருக்கு தோனி ‘ஐடியா’

சகாருக்கு தோனி ‘ஐடியா’

அக்டோபர் 08,2021 துபாய்: தோனி கொடுத்த 'ஐடியா' காரணமாக, தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார் சகார். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் ...
வரமாக வருவாரா வருண்... *காயம் சாபம் தீருமா

வரமாக வருவாரா வருண்... *காயம் சாபம் தீருமா

அக்டோபர் 05,2021 துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடரில் சாதிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்திக்கு, முழங்கால் காயம் தொல்லையாக உள்ளது. ஐ.சி.சி., உலக கோப்பை 'டி-20' தொடர்(அக்.17--நவ.14) ...
ஐ.பி.எல்., அணி விலை ரூ. 4000 கோடி

ஐ.பி.எல்., அணி விலை ரூ. 4000 கோடி

அக்டோபர் 05,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் இணையவுள்ள ஒரு அணியின் மதிப்பு ரூ. 3000 முதல் ரூ. 4000 கோடி வரை இருக்கலாம். ஐ.பி.எல்., தொடரில் சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ...