Dinamalar

வார்னர் நீக்கம் ஏன் * சொல்கிறார் பயிற்சியாளர் டிரிவர் ,  
 

வார்னர் நீக்கம் ஏன் * சொல்கிறார் பயிற்சியாளர் டிரிவர்

துபாய்: ''இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் வார்னர் நீக்கப்பட்டார்,'' என ஐதராபாத் பயிற்சியாளர் டிரிவர் பெய்லிஸ் தெரிவித்தார். ஐ.பி.எல்., தொடரில் ஐதராபாத் அணி கேப்டனாக இருந்தவர் டேவிட் வார்னர் 34. இதுவரை 150 போட்டிகளில் 5449 ரன் எடுத்த இவர், ஐ.பி.எல்., அரங்கில் அதிக ரன் எடுத்த வீரர்களில் 5வது வீரராக உள்ளார். சமீபகாலமாக மோசமான 'பார்ம்' காரணமாக தடுமாறுகிறார். கடந்த 4 போட்டியில் 6, 57, 0, 2 ரன் எடுத்தார். ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவர் சேர்க்கப்படவில்லை. தவிர மைதானத்துக்கும் வரவில்லை. இதுகுறித்து பயிற்சியாளர் டிரிவர் பெய்லிஸ் கூறியது:

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனில் எங்கள் அணி இனிமேல் பைனலுக்கு செல்ல முடியாது. இதனால் இளம் வீரர்களுக்கு போட்டி அனுபவம் குறித்து கற்றுக் கொடுக்க விரும்பினோம். ஏனெனில் அணியில் பல இளம் வீரர்கள் களத்திற்கு வெளியிலேயே அமர்ந்துள்ளனர். பலர் 'ரிசர்வ்' வீரர்களாவும் உள்ளனர். இதனால் அவர்களுக்கு தொடர்ந்து பல போட்டிகளில் வாய்ப்பு கொடுக்க முடிவு செய்தோம்.

இதற்கு வார்னர் ஆதரவு கொடுத்தார். அவர் ஓட்டலில் இருந்தே போட்டிகளை பார்த்துக் கொள்வதாக தெரிவித்தார். மற்றபடி நாங்கள் அனைவரும் ஒற்றுமையாகத் தான் உள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சகாருக்கு தோனி ‘ஐடியா’

சகாருக்கு தோனி ‘ஐடியா’

அக்டோபர் 08,2021 துபாய்: தோனி கொடுத்த 'ஐடியா' காரணமாக, தோழியிடம் காதலை வெளிப்படுத்தியுள்ளார் சகார். ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. துபாயில் நடந்த லீக் ...
வரமாக வருவாரா வருண்... *காயம் சாபம் தீருமா

வரமாக வருவாரா வருண்... *காயம் சாபம் தீருமா

அக்டோபர் 05,2021 துபாய்: 'டி-20' உலக கோப்பை தொடரில் சாதிக்க காத்திருக்கும் வருண் சக்ரவர்த்திக்கு, முழங்கால் காயம் தொல்லையாக உள்ளது. ஐ.சி.சி., உலக கோப்பை 'டி-20' தொடர்(அக்.17--நவ.14) ...
ஐ.பி.எல்., அணி விலை ரூ. 4000 கோடி

ஐ.பி.எல்., அணி விலை ரூ. 4000 கோடி

அக்டோபர் 05,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., தொடரில் இணையவுள்ள ஒரு அணியின் மதிப்பு ரூ. 3000 முதல் ரூ. 4000 கோடி வரை இருக்கலாம். ஐ.பி.எல்., தொடரில் சென்னை, மும்பை, டில்லி, கோல்கட்டா, பெங்களூரு, பஞ்சாப், ...