Dinamalar

கோல்கட்டா நாயகன் நரைன்! *கோஹ்லி அணியை வெளியேற்றினார் ,  
 

கோல்கட்டா நாயகன் நரைன்! *கோஹ்லி அணியை வெளியேற்றினார்

சார்ஜா: ஐ.பி.எல்., தொடரில் இருந்து மீண்டும் வெறுங்கையுடன் வெளியேறியது கோஹ்லியின் பெங்களூரு அணி. நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் சுனில் நரைன் சுழல் 'சூறாவளியில்' சிக்கி, கோல்கட்டாவிடம் 4 விக்கெட்டில் வீழ்ந்தது.

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. நேற்று நடந்த 'எலிமினேட்டர்' போட்டியில் புள்ளிப்பட்டியலில் 3, 4வது இடம் பெற்ற கோஹ்லியின் பெங்களூரு, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற பெங்களூரு அணி கேப்டன் கோஹ்லி, பேட்டிங் தேர்வு செய்தார்.

நல்ல துவக்கம்

பெங்களூரு அணிக்கு கோஹ்லி, தேவ்தத் படிக்கல் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. 5 ஓவரில் 49 ரன் எடுத்து வலுவான இலக்கை நோக்கி முன்னேறியது. இந்நிலையில் 18 பந்தில் 21 ரன் எடுத்த படிக்கல், பெர்குசன் 'வேகத்தில்' போல்டாக, நிலைமை அப்படியே தலைகீழானது. அடுத்து வந்த ஸ்ரீகர் பரத், வருண் சக்ரவர்த்தி பந்தில் தினேஷ் கார்த்திக் தயவில் தப்பினார்.

நரைன் 'சுழல்'

கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளாத இவர் 16 பந்தில் 9 ரன் மட்டும் எடுத்து, சுனில் நரைன் 'சுழலில்' சிக்கினார். அடுத்து கோஹ்லியும் (39), நரைனிடம் சரண் அடைந்தார். தொடர்ந்து அசத்திய நரைன், டிவிலியர்ஸ் (11), மேக்ஸ்வெலை (18 பந்து, 15 ரன்) வெளியேற்றினார். ஷாபாஸ் நதீம் (13), கிறிஸ்டியன் (9) நிலைக்கவில்லை.

பெங்களூரு அணியின் இன்னிங்சில் நேற்று ஒரு சிக்சர் கூட அடிக்கப்படவில்லை. 20 ஓவரில் பெங்களூரு அணி 7 விக்கெட்டுக்கு 138 ரன் மட்டும் எடுத்தது. ஹர்ஷல் படேல் (8), கார்டன் (0) அவுட்டாகாமல் இருந்தனர்.

கோல்கட்டா சார்பில் நரைன் அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.

எளிய இலக்கு

எளிய இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் (29) 'சூப்பர்' துவக்கம் கொடுத்தது. திரிபாதி (6), வெங்கடேஷ் (26) அடுத்தடுத்து அவுட்டாக, பெங்களூரு அணி பக்கம் வெற்றி திரும்பும் என நம்பப்பட்டது. மாறாக கிறிஸ்டியன் வீசிய 12வது ஓவரில் 3 சிக்சர் அடித்த நரைன் (26), போட்டியை மீண்டும் கோல்கட்டா பக்கம் கொண்டு சென்றார். தினேஷ் கார்த்திக் (10) ஏமாற்றிய போதும், கோல்கட்டா அணி 19.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 139 ரன் எடுத்து வெற்றி பெற்று, தகுதிச்சுற்று 2க்கு முன்னேறியது. மார்கன் (5), சாகிப் (9) அவுட்டாகாமல் இருந்தனர்.



டில்லியுடன் மோதல்

நேற்று 'எலிமினேட்டர்' போட்டியில் வென்ற கோல்கட்டா அணி, நாளை நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றில், டில்லி அணியுடன் மோதும். இதில் வெல்லும் அணி அக். 15ல் துபாயில் நடக்கும் பைனலில் சென்னையை சந்திக்கும்.



900

'டி-20' கிரிக்கெட்டில் 900 வது பவுண்டரி அடித்த 7வது வீரர் ஆனார் கோஹ்லி. இவர் 319 போட்டியில் 901 பவுண்டரி அடித்துள்ளார். விண்டீசின் கெய்ல் (1105), இந்தியாவின் ஷிகர் தவான் (986), ஆஸ்திரேலியாவின் வார்னர் (973) 'டாப்-3' பட்டியலில் உள்ளனர்.



513

நேற்று 15 ரன் எடுத்த மேக்ஸ்வெல் (15 போட்டி, 513 ரன்), 14வது சீசனில் 500 ரன் என்ற மைல்கல்லை எட்டினார். ஐ.பி.எல்., அரங்கில் 'டாப் ஆர்டரில்' இல்லாமல் களமிறங்கி, ஒரே சீசனில் 500 ரன்னுக்கும் மேல் எடுத்த மூன்றாவது வீரர் ஆனார். இதற்கு முன் ரிஷாப் பன்ட் (579 ரன், 2018), ரோகித் சர்மா (538, 2013) இதுபோல ரன் எடுத்தனர்.

* பெங்களூரு அணியில் கோஹ்லி, கெய்ல், டிவிலியர்சிற்கு அடுத்து, ஒரு சீசனில் 500 ரன்னுக்கும் மேல் எடுத்த இரண்டாவது வீரர் ஆனார் மேக்ஸ்வெல். இதற்கு முன் 2010ல் காலிஸ் 572 ரன் எடுத்தார்.



சேராத கோஹ்லி-டிவிலியர்ஸ்

பெங்களூரு அணியில் கோஹ்லி-டிவிலியர்ஸ் ஜோடி எதிரணிக்கு 'கிலி' கொடுக்கும். இம்முறை 14வது சீசனில் ஒருமுறை கூட இந்த இருவரும் இணைந்து பேட்டிங் செய்யவில்லை.



நரைன் 4 விக்.,

ஐ.பி.எல்., 'பிளே ஆப்' சுற்றில் 9 போட்டிகளில் பங்கேற்ற சுனில் நரைன், 4 விக்கெட் மட்டும் தான் வீழ்த்தி இருந்தார். நேற்று ஒரே போட்டியில் 4 விக்கெட் சாய்த்து அசத்தினார்.

* பஞ்சாப் அணியின் ஹர்பிரீத் பிராருக்கு அடுத்து, ஒரே இன்னிங்சில் கோஹ்லி-டிவிலியர்ஸ்-மேக்ஸ்வெலை அவுட்டாக்கிய பவுலர் ஆனார் நரைன்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

பைனல் கனவில் குஜராத் * ராஜஸ்தான் அணியுடன் மோதல்

பைனல் கனவில் குஜராத் * ராஜஸ்தான் அணியுடன் மோதல்

மே 23,2022 கோல்கட்டா: 'டி-20' தொடரின் முதல் தகுதிச்சுற்றில் குஜராத், ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் வெல்லும் பட்சத்தில் குஜராத் அணி முதன் முறையாக பைனலுக்கு தகுதி ...
ஹர்மன்பிரீத் அணி வெற்றி

ஹர்மன்பிரீத் அணி வெற்றி

மே 23,2022 புனே: பெண்களுக்கான 'டி-20' சேலஞ்ச் லீக் போட்டியில் அசத்திய ஹர்மன்பிரீத் தலைமையிலான 'சூப்பர்நோவாஸ்' அணி 49 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. புனேயில், ...
மந்தனா–ஹர்மன்பிரீத் அணிகள் மோதல்: பெண்கள் ‘டி–20’ சேலஞ்ச் போட்டியில்

மந்தனா–ஹர்மன்பிரீத் அணிகள் மோதல்: பெண்கள் ‘டி–20’ சேலஞ்ச் போட்டியில்

மே 22,2022 புனே: பெண்களுக்கான 'டி-20' சேலஞ்ச் தொடரில் இன்று மந்தனா, ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான அணிகள் மோதுகின்றன. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், கடந்த 2018 ...