Dinamalar

கோல்கட்டா கொடி பறக்குமா * டில்லி துாள் கிளப்புமா... ,  
 

கோல்கட்டா கொடி பறக்குமா  * டில்லி துாள் கிளப்புமா...

சார்ஜா: ஐ.பி.எல்., தொடரின் இரண்டாவது தகுதிச்சுற்றில் இன்று டில்லி, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெல்லும் அணி பைனலுக்கு செல்லலாம் என்பதால் விறுவிறு போட்டி காத்திருக்கிறது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசன் எமிரேட்சில் நடக்கிறது. இத்தொடரின் பைனலுக்கு சென்னை அணி ஏற்கனவே முன்னேறி விட்டது. 'எலிமினேட்டர்' போட்டியில் தோற்ற பெங்களூரு அணி தொடரில் இருந்து வெளியேறியது. இன்று நடக்கும் இரண்டாவது தகுதிச்சுற்றில் ரிஷாப் பன்ட்டின் டில்லி, இயான் மார்கனின் கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

டில்லி அணி பயிற்சியாளர் பாண்டிங் வருகைக்குப் பின், 2019ல் 3, 2020ல் 2 வது இடம் பெற்றது. அஞ்சத்தக்க பேட்டிங், மிரட்டும் பவுலிங் படை உள்ளது. லீக் சுற்றில் 14ல் 10 வெற்றிகள் பெற்ற வலுவான இந்த அணி, முக்கிய போட்டிகளில் கடந்த சீசன் போல மீண்டும் சொதப்புகிறது.

இன்று தோற்றால் வெளியேற நேரிடும் என்பதால் ஷிகர் தவான் (551 ரன்), பிரித்வி ஷா (461) ஜோடி மீண்டும் நல்ல துவக்கம் தர வேண்டும். 'மிடில் ஆர்டரில்' ஸ்ரேயாஸ் ஐயர், இளம் கேப்டன் ரிஷாப் பன்ட், ஹெட்மயர் நம்பிக்கை தருகின்றனர்.

பவுலிங் நம்பிக்கை

பந்து வீச்சில் கடந்த அவேஷ் கான் இதுவரை 23 விக்கெட் சாய்த்து மிரட்டுகிறார். ரபாடா (13), நார்ட்ஜே (10) கூட்டணியும் தங்கள் பங்கிற்கு கைகொடுக்கின்றனர். சுழலில் அக்சர் படேல் (15), அனுபவ அஷ்வின் (5) உதவினால், லீக் சுற்றில் கோல்கட்டாவிடம் அடைந்த தோல்விக்கு இன்று பதிலடி கொடுத்து பைனலுக்கு செல்லலாம்.

திடீர் எழுச்சி

கோல்கட்டா அணி எமிரேட்சில் களமிறங்கிய 7 போட்டியில் 5ல் வெற்றி பெற்றது. அதிக ரன்ரேட்டும் கைகொடுக்க, ஐந்து முறை சாம்பியன் மும்பையை வெளியேற்றி, 'பிளே ஆப்' வந்தது. இதில் பெங்களூருவை சாய்த்தது கூடுதல் நம்பிக்கை கொடுத்துள்ளது.

இருப்பினும் அணியின் பேட்டிங் இத்தொடர் முழுவதும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. திரிபாதி (383), சுப்மன் கில் (381), நிதிஷ் ராணா (370), வெங்கடேஷ் ஐயர் (270), தினேஷ் கார்த்திக் (214) சற்று உதவுகின்றனர். கேப்டன் மார்கன் 15 போட்டியில் 129 ரன் தான் எடுத்துள்ளார். இன்று எழுச்சி காண்பரா என பொறுத்திருந்து காணலாம்.

நரைன் பலம்

பந்துவீச்சில் தந்திர பவுலர் வருண் சக்ரவர்த்தி (16), சாகிப் அல் ஹசன் அசத்துவதால் எதிரணி பாடு திண்டாட்டமாகி விடுகிறது. வேகத்தில் ஷிவம் மாவி, பெர்குசன் (12) மட்டும் ஆறுதல் தருகின்றனர். பெங்களூருவுக்கு எதிராக பவுலிங், பேட்டிங் என இரண்டிலும் மிரட்டி தனி நபராக அணியை கரை சேர்த்த சுழல் 'மாயாவி' சுனில் நரைன் (14) மீண்டும் அசத்த முயற்சிக்கலாம்.யாருக்கு வாய்ப்பு

டில்லி, கோல்கட்டா அணிகள் மொத்தம் 28 போட்டிகளில் மோதின. இதில் டில்லி 13, கோல்கட்டா 15 போட்டிகளில் வெற்றி பெற்றன.

* கடைசியாக மோதிய 4 போட்டிகளில் இரு அணிகளும் தலா 2ல் வெற்றி பெற்றன.மைதானம் எப்படி

எமிரேட்சின் சார்ஜா மைதானத்தில் 14வது சீசன் ஐ.பி.எல்., இரண்டாவது கட்ட தொடரில் இதுவரை 9 போட்டிகள் நடந்தன. இதில் எதிரணி இலக்கை 'சேஸ்' செய்த அணிகள் 6ல் வெற்றி பெற்றன. 3 போட்டிகளில் மட்டும் முதலில் களமிறங்கிய அணிகள் வென்றன.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

அக்டோபர் 15,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது. ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது ...
வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...