உலகம் மதிக்கும் வீரர் * கவாஸ்கர் பாராட்டு ,

'டி-20' கிரிக்கெட்டில் எதுவும் உறுதியில்லை என்பதால் பார்ப்பவர்களை நகம் கடித்து, இருக்கை நுனியில் உட்கார வைக்கும். இளம் வீரர்கள் பெரிய 'ஷாட்' அடித்து அவுட்டாகி அணியை அந்தரத்தில் விட்டுவிடுகின்றனர். டில்லி போட்டியில் கோல்கட்டா அணியினர் இப்படித் தான் செயல்பட்டனர்.
இவ்விஷயத்தில் தோனி வித்தியாசமானவர். டில்லிக்கு எதிராக குறைந்த பந்தில் அதிக ரன் தேவை என்ற நிலையில் பொறுப்பாக செயல்பட்டு அசத்தினார். இதனால் தான் கிரிக்கெட் உலகில் தோனி பெரிதும் மதிக்கப்படுகிறார். இன்றைய பைனலில் பங்கேற்கும் தோனி (சென்னை), மார்கன் (கோல்கட்டா) என இருவரும் தங்கள் தேசிய அணிக்காக உலக கோப்பை வென்ற தந்த அனுபவம் கொண்டவர்கள். கடந்த சீசனில் அடைந்த ஏமாற்றத்தில் இருந்து எழுச்சி பெற்ற இவர்கள் இன்று துபாயில் நடக்கும் ஐ.பி.எல்., பைனலில் சாதிக்க போராடுவது உறுதி.