Dinamalar

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன் ,  
 

சென்னை ‘சிங்கங்கள்’ அசத்தல் * நான்காவது முறையாக சாம்பியன்

துபாய்: ஐ.பி.எல்., தொடரில் நான்காவது முறையாக கோப்பை வென்றது சென்னை அணி. நேற்று நடந்த பைனலில் 27 ரன்னில் கோல்கட்டாவை வீழ்த்தியது.

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனின் இரண்டாவது கட்ட போட்டிகள் எமிரேட்சில் நடந்தன. துபாயில் நடந்த பைனலில் தோனியின் சென்னை, மார்கனின் கோல்கட்டா அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மார்கன் பவுலிங் தேர்வு செய்தார்.

ருதுராஜ் நம்பிக்கை

சென்னை அணிக்கு ருதுராஜ், டுபிளசி ஜோடி வலுவான துவக்கம் கொடுத்தது. 'பவர் பிளே' ஓவர் (6) விக்கெட் இழப்பின்றி 50 ரன் எடுத்தது. பின் திடீரென ரன் வேகம் குறைந்தது. இதனால் ஏற்பட்ட நெருக்கடியில் சிக்சர் அடிக்க முயன்ற ருதுராஜ் (32), சுனில் நரைன் பந்தில் ஷிவம் மாவியிடம் 'கேட்ச்' கொடுத்தார். டுபிளசி 35 வது பந்தில் அரைசதம் கடக்க, சென்னை அணி 11.3 ஓவரில் 100 ரன்களை எட்டியது.

உத்தப்பா 15 பந்தில் 31 ரன் எடுத்தார். கடைசி பந்தில் டுபிளசி (86) அவுட்டானார். சென்னை அணி 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 192 ரன் குவித்தது. மொயீன் அலி (37) அவுட்டாகாமல் இருந்தார்.

வெங்கடேஷ் அரைசதம்

கடின இலக்கைத் துரத்திய கோல்கட்டா அணிக்கு வெங்கடேஷ் ஐயர், சுப்மன் கில் ஜோடி 10 ஓவரில் 88/0 ரன் எடுத்தது. 11வது ஓவரை வீசிய ஷர்துல் தாகூர், அரைசதம் அடித்த வெங்கடேஷ் (50), ராணாவை (0) அவுட்டாக்கினார். சுனில் நரைன் (2) விரைவில் வெளியேறினார். சுப்மனும் (51) அவுட்டாக சென்னை பக்கம் வெற்றி திரும்பியது.

தினேஷ் கார்த்திக் (9), சாகிப் (0), திரிபாதி (2), மார்கன் (4) என வரிசையாக ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். ஷிவம் மாவி (20) ஆறுதல் தந்தார். கோல்கட்டா அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 165 ரன் மட்டும் எடுத்து, தோல்வி அடைந்தது. பெர்குசன் (18) அவுட்டாகாமல் இருந்தார்.



தோனி '300'

சர்வதேசம், உள்ளூர் என 'டி-20' அரங்கில் நேற்று 300வது போட்டிக்கு கேப்டனாக களமிறங்கினார் தோனி. இந்தியா, சென்னை, புனே அணிகளுக்காக 177ல் வெற்றி பெற்றுத் தந்தார். 118 தோல்வி கிடைத்தது. 2 போட்டி 'டை' ஆக, 3 போட்டிகள் கைவிடப்பட்டன.

* விண்டீசின் டேரன் சமி (208), இந்தியாவின் கோஹ்லி (185) அடுத்த இரு இடங்களில் உள்ளனர்.



ஜடேஜா '200'

சென்னை அணி 'ஆல் ரவுண்டர்' ஜடேஜா. நேற்று தனது 200 வது போட்டியில் பங்கேற்றார். இதில் 2386 ரன் எடுத்த இவர், 125 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.



100

சென்னை அணி துவக்க வீரர் டுபிளசி. நேற்று தனது 100வது போட்டியில் களமிறங்கினார். இதில் 21 அரைசதம் உட்பட 2935 ரன்கள் எடுத்தார்.



ரெய்னா இல்லாத...

ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி இதற்கு முன் பங்கேற்ற 9 பைனலிலும் ரெய்னா விளையாடினார். நேற்று இவருக்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை.



635

ஐ.பி.எல்., தொடரின் 14வது சீசனில் அதிக ரன் எடுத்த வீரர்களில் முதலிடம் பெற்றார் சென்னை வீரர் ருதுராஜ். இவர் 16 போட்டிகளில் 635 ரன் எடுத்தார். சென்னையின் மற்றொரு வீரர் டுபிளசி (633 ரன், 16 போட்டி), பஞ்சாப்பின் ராகுல் (13ல் 626) அடுத்த இரு இடம் பெற்றனர்.

* கடந்த 2013 (கோஹ்லி 634, கெய்ல் 708-பெங்களூரு), 2016க்குப் (கோஹ்லி 973, டிவிலியர்ஸ் 687-பெங்களூரு) பின் ஒரே அணியின் இரு வீரர்கள் 600 ரன்னுக்கும் மேல் சேர்த்த நிகழ்வு இம்முறை (ருதுராஜ் 635, டுபிளசி 633-சென்னை) நிகழ்ந்தது.



18

சென்னை, கோல்கட்டா அணிகள் 27 போட்டிகளில் மோதின. இதில் சென்னை அணி 18வது வெற்றியை (9 தோல்வி) நேற்று பதிவு



ரூ. 20 கோடி

கோப்பை வென்ற சென்னை அணிக்கு ரூ. 20 கோடி பரிசுத் தொகை கிடைத்தது. கோல்கட்டா அணி ரூ. 12.5 கோடி பெற்றது.





4

ஐ.பி.எல்., அரங்கில் 2010, 2011, 2018ஐ தொடர்ந்து சென்னை அணி நான்காவது முறையாக (2021) கோப்பை வென்றது. ஐந்து முறை சாதித்த மும்பை அணி (2013, 2015, 2017, 2019, 2020) முதலிடத்தில் உள்ளது. கோல்கட்டா (2012, 2014) இரு முறை கோப்பை வென்றது. ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) தலா ஒரு முறை சாம்பியன் ஆகின.



9

ஐ.பி.எல்., தொடரின் முதல் 13 சீசன் பைனலில், முதலில் பேட் செய்த அணி 8 முறை கோப்பை வென்றன. 5 முறை 'சேஸ்' செய்த அணி சாதித்தது. இந்நிலையில் நேற்று 9வது முறையாக முதலில் களமிறங்கிய அணி (சென்னை) கோப்பை வென்று அசத்தியது.



எடுபடாத 'சுழல்'

கோல்கட்டா அணியின் 'சுழல்' மும்மூர்த்திகள் வருண் சக்ரவர்த்தி, சுனில் நரைன், சாகிப் அல் ஹசன். பைனலில் சென்னை பேட்டர்கள் முன் இவர்களது சுழல் எடுபடவில்லை. வருண் (4 ஓவரில், 38/0 ரன்), சாகிப் (3ல் 33/0) ரன்களை வாரி வழங்கினர். நரைன் (26 ரன்/2 விக்.,) ஆறுதல் தந்தார்.



Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

வலிமையா வர்றாரு ‘தல’ தோனி * கோப்பை வெல்லுமா சென்னை

அக்டோபர் 14,2021 துபாய்: ஐ.பி.எல்., தொடரின் பைனலில் இன்று சென்னை, கோல்கட்டா அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை அணிக்கு 'தல' தோனியின் 'மேஜிக்' கைகொடுக்கலாம். கோல்கட்டாவும் ...
திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

திருப்பம் தந்த திரிபாதி ‘சிக்சர்’: கடைசி ஓவரில் கோல்கட்டா வெற்றி

அக்டோபர் 13,2021 சார்ஜா: ஐ.பி.எல்., பரபரப்பான போட்டியின் கடைசி ஓவரில் திரிபாதி சிக்சர் விளாச கோல்கட்டா அணி 3 விக்கெட் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்று பைனலுக்குள் நுழைந்தது. ...
ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

ஐ.பி.எல்., புதிய அணிகள்: பி.சி.சி.ஐ., அவகாசம்

அக்டோபர் 13,2021 புதுடில்லி: ஐ.பி.எல்., புதிய அணிகளுக்கான ஏல விண்ணப்பத்தை பெறுவதற்கு வரும் அக். 20 வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் ...