ஐ.பி.எல்., சாதனை துளிகள் ,

ஐ.பி.எல்., அரங்கில் மும்பை அணி அதிகபட்சமாக 5 முறை (2013, 2015, 2017, 2019, 2020) கோப்பை வென்றுள்ளது. சென்னை 4 (2010, 2011, 2018, 2021), கோல்கட்டா 2 (2012, 2014), ராஜஸ்தான் (2008), டெக்கான் (2009), ஐதராபாத் (2016) அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றன.
* அதிக ரன் எடுத்த பேட்டர்கள் வரிசையில் கோஹ்லி (6283 ரன், 207 போட்டி), ஷிகர் தவான் (192ல் 5784), ரோகித் சர்மா (213ல் 5611 ரன்) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
* ஒரு இன்னிங்சில் அதிக ரன் எடுத்த வீரர்களில் பெங்களூருவின் கிறிஸ் கெய்ல் (175* ரன், எதிர்: புனே, 2013) முதலிடத்தில் உள்ளார்.
* அதிக சிக்சர் விளாசிய வீரர்கள் வரிசையில் கெய்ல் (357 சிக்சர்), டிவிலியர்ஸ் (251), ரோகித் சர்மா (227), தோனி (219), போலார்டு (214), கோஹ்லி (210) முதல் ஆறு இடங்களில் உள்ளனர்.
* அதிக விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் மலிங்கா (170 விக்கெட், 122 போட்டி), டுவைன் பிராவோ (151ல் 167), அமித் மிஷ்ரா (154ல் 166) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.
* ஒரு போட்டியில் சிறந்த பந்துவீச்சை பதிவு செய்த பவுலர்களில் மும்பையின் அல்சாரி ஜோசப் (6 விக்கெட், 12 ரன், 3.4 ஓவர், எதிர்: ஐதராபாத், 2019) முதலிடத்தில் உள்ளார்.
* அதிக விக்கெட் வீழ்ச்சிக்கு வித்திட்ட விக்கெட் கீப்பர் வரிசையில் தோனி (122 'கேட்ச்' 39 'ஸ்டெம்பிங்' = 161 விக்கெட் வீழ்ச்சி) முன்னிலை வகிக்கிறார்.
* அதிக 'கேட்ச்' செய்த பீல்டர்களில் ரெய்னா (109 'கேட்ச்') முதலிடத்தில் உள்ளார்.
* தோனி (220 போட்டி), தினேஷ் கார்த்திக் (213), ரோகித் (213), கோஹ்லி (207), ரெய்னா (205), ஜடேஜா (200) அதிக போட்டிகளில் பங்கேற்றனர்.
* அதிக வெற்றி தேடித்தந்த கேப்டன்கள் வரிசையில் தோனி (121 வெற்றி), ரோகித் (75), காம்பிர் (71), கோஹ்லி (64) முதல் நான்கு இடங்களில் உள்ளனர்.