Dinamalar

பிரித்தி ஜிந்தான்னு சொன்ன ரெய்னா: கோபமான இர்பான் பதான் ,  
 

பிரித்தி ஜிந்தான்னு சொன்ன ரெய்னா: கோபமான இர்பான் பதான்

மும்பை: பிரித்தி ஜிந்தாவை பற்றி ரெய்னா பேசியதும் கோபமான இர்பான் பதான், நேரலையில் இருந்து வெளியேறி அதிர்ச்சி தந்தார். இந்தியாவில் 'டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதில் சென்னை அணியில் இருந்து கழற்றி விடப்பட்ட ரெய்னா, ஹிந்தி மொழி வர்ணனையாளராக உள்ளார். முன்னாள் வீரர் இர்பான் பதானுடன் சேர்ந்து கடந்த ஏப்.1ல் நடந்த பஞ்சாப்-கோல்கட்டா போட்டி பற்றி நேரலையில் விவாதித்து கொண்டிருந்தார். பஞ்சாப் தோல்வி குறித்து அலசினர். அப்போது பஞ்சாப் அணியின் சக உரிமையாளரும் நடிகையுமான பிரித்தி ஜிந்தா பற்றி ரெய்னா குறிப்பிட்டார். உடனே கோபமடைந்த இர்பான் பதான்,'சம்பந்தப்பட்ட அணியை குறித்து பேசும் போது, பெண்களின் பெயரை தேவையில்லாமல் இழுப்பது சரியல்ல. இனி நேரலையில் பங்கேற்க முடியாது,' என்று கோபமாக கூறி வெளியேறினார். பின் ஒரு இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். இதை பார்த்த ரெய்னா அதிர்ச்சி அடைந்தார். உடனே சக வர்ணனையாளர்கள் ரெய்னாவிடம், 'இர்பானை சமாதானம் செய்யுங்கள்' என்றனர்.



ரெய்னாவும் நேரடியாக இர்பானிடம் சென்று பேசினார். ஒருவழியாக நேரலை நடக்கும் பகுதிக்கு அழைத்து வந்தார். அப்போது இர்பான் குலுங்கி குலுங்கி சிரித்தார். அன்றைய நாள், 'முட்டாள்கள் தினம்' என்பதால், அனைவரும் சேர்ந்து திட்டமிட்டு ரெய்னாவை ஏமாற்றியதாக கூற, அரங்கில் சிரிப்பலை ஓய சிறிது நேரமானது. இர்பானின் கச்சிதமான நடிப்பையும் ரெய்னா வெகுவாக பாராட்டினார். இந்த வீடியோ தற்போது 'வைரலாகி' வருகிறது.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...