Dinamalar

‘தல’ வா... தலைமை ஏற்க வா... * தோனிக்கு வழிவிட்ட ஜடேஜா ,  
 

‘தல’ வா... தலைமை ஏற்க வா... * தோனிக்கு வழிவிட்ட ஜடேஜா

புனே: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஜடேஜா. மீண்டும் தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்தியாவில் நடக்கும் 'டி-20' தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை அணிக்கு பேட்டிங், பவுலிங் என எதுவும் சரியாக அமையவில்லை. 8 போட்டிகளில் 2ல் மட்டும் வென்று 4 புள்ளியுடன் 9 வது இடத்தில் உள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் இத்தொடரில் குறைந்தபட்சம் 16 புள்ளிகள் பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று குறித்து யோசிக்க முடியும். சென்னை அணி மீதமுள்ள 8 போட்டிகளிலும் வென்றாக வேண்டிய நிலை உள்ளது.

ஜடேஜா விலகல்

இதனிடையே பேட்டிங்கில் கவனம் செலுத்தும் வகையில் ஜடேஜா பதவி விலக முன்வந்துள்ளார். ஐதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில், தோனி மீண்டும் கேப்டனாக களமிறங்குகிறார். இவரது தலைமையில் சென்னை அணி எழுச்சி பெறும் என நம்பலாம்.

சென்னை அணி தரப்பில் வெளியான செய்தியில், 'ஜடேஜா கேப்டன் பதவியை விட்டு விலக முடிவு செய்துள்ளார். மீதமுள்ள போட்டிகளில் பேட்டிங் கவனம் செலுத்த திட்டமிட்டுள் இவர், தோனியிடம் மீண்டும் தலைமை தாங்குமாறு கேட்டுக் கொண்டார். அணியின் நலனுக்காக இதை தோனி ஏற்றுக் கொண்டார்,' என தெரிவித்துள்ளது.



மீள்வாரா ருதுராஜ்

இந்திய அணியின் எதிர்கால துவக்க வீரர் என கூறப்படும் ருதுராஜ் (8 போட்டி, 138 ரன்) இன்றைய போட்டியில் மீண்டும் தன்னை நிரூபிக்க வேண்டும். உத்தப்பா (228), ஷிவம் துபே (247) சீரான பேட்டிங்கை தர வேண்டும்.

'சீனியர்' தோனி (132) இம்முறை சிறப்பாக 'பினிஷிங்' செய்கிறார். பஞ்சாப்பிற்கு எதிராக 78 ரன் எடுத்த அம்பதி ராயுடு (246), கேப்டன் ஜடேஜா (112) வெற்றிக்கு போராடலாம்.

பவுலிங்கில் முகேஷ் சவுத்ரி (7 விக்.,), பிரிட்டோரியஸ் (4) ரன்களை வாரி வழங்குகின்றனர். மூத்த வீரர் பிராவோ (14 விக்.,) மட்டும் ஆறுதல் தருகிறார். சுழலில் தீக்சனா (8) செயல்பாடு நம்பிக்கை தருகிறது.

உம்ரான் பலம்

ஐதராபாத் அணி (10 புள்ளி) 8 போட்டியில் 5 வெற்றி பெற்றது. கேப்டன் வில்லியம்சன் (8ல் 148 ரன்) ஏமாற்றம் தந்தாலும் மார்க்ரம் (246 ரன்) , அபிஷேக் (285), திரிபாதி 228) தேவையான ரன்களை எடுக்கின்றனர். பூரன் (116) ஏமாற்றம் தொடர்வது பலவீனம்.

பவுலிங்கில் 8 போட்டியில் 15 விக்கெட் சாய்த்த 'காஷ்மீர் எக்ஸ்பிரஸ்' உம்ரான் மாலிக், இத்தொடரில் சராசரியாக 150 கி.மீ., வேகத்தில் பந்து வீசுகிறார்.

தவிர அதிவேகத்தில் வீசப்பட்ட பந்துகளுக்கான 'டாப்-5' பட்டியல், ஐந்திலும் இவர் தான் உள்ளார். இத்தொடரில் உம்ரான் வீசிய பந்துகளில் 91 சதவீதம் 145 கி.மீ., வேகத்தில் வீசப்பட்டன.

இவருக்கு புவனேஷ்வர் (9), நடராஜன் (15), ஜான்சென் 6) கைகொடுத்தால் சென்னைக்கு மீண்டும் சிக்கல் தான்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மே 03,2022 மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...