Dinamalar

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை ,  
 

‘நோ பால்’...‘வைடு’ சர்ச்சை தீருமா *வருமா டி.ஆர்.எஸ்., முறை

மும்பை: ''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்,'' என வெட்டோரி வலியுறுத்தினார். இந்தியாவில் 'டி-20' கிரிக்கெட் தொடர் நடக்கிறது. நேற்று முன் தினம் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா அணி, ராஜஸ்தானை வீழ்த்தியது. இதில் கடைசி இரு ஓவரில் கோல்கட்டா வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டன. 19வது ஓவரை பிரசித் கிருஷ்ணா வீசினார். கோல்கட்டாவின் ரிங்கு சிங், நிதிஷ் ராணா 'கிரீஸ்' முழுவதும் நகர்ந்து சென்று விளையாடினர். இதனை உணர்ந்த கிருஷ்ணா 'வைடு யார்க்கராக' வீசினார். இதற்கு அம்பயர் நிதின் பண்டிட் தவறாக 'வைடு' வழங்கினார். இதே ஓவரில் மூன்று வைடுகள் வழங்கப்பட, ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் வேண்டுமென்றே 'ரிவியு' கேட்டு ஆத்திரத்தை வெளிப்படுத்தினார். இந்த 'வைடுகள்' காரணமாக போட்டி திசைமாறியது. கோல்கட்டா அணி பக்கம் வெற்றி சென்றது.

இடுப்புக்கு மேல் 'நோ-பால்':

இதே போல டில்லி-ராஜஸ்தான் மோதிய லீக் போட்டியிலும் சர்ச்சை ஏற்பட்டது. இதில் டில்லி வெற்றிக்கு கடைசி ஓவரில் 36 ரன்கள் தேவைப்பட்டன. மெக்காய் வீசிய இந்த ஓவரில் டில்லி அணியின் பாவெல் வரிசையாக மூன்று சிக்சர்கள் விளாசினார். மூன்றாவது சிக்சரை இடுப்புக்கு மேலே வீசப்பட்ட பந்தில் அடித்தார். இதற்கு 'நோ-பால்' வழங்க வேண்டுமென டில்லி அணியின் கேப்டன் ரிஷாப் பன்ட், துணை பயிற்சியாளர் பிரவீண் ஆம்ரே கோரிக்கை விடுத்தனர். இது நிராகரிக்கப்பட, டில்லிக்கு கூடுதலாக ஒரு பந்து, 'பிரீ-ஹிட்' வாய்ப்பு நழுவியது. இறுதியில் தோல்வி அடைந்தது. இப்பிரச்னைக்கு தீர்வு காண 'வைடு', 'பேட்டரின் இடுப்புக்கு மேலே வீசப்படும் நோ-பால்' தொடர்பாக அம்பயர் தீர்ப்பை மறுபரிசீலனை(டி.ஆர்.எஸ்.,) செய்யும் முறையில் 'ரிவியு' செய்ய வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இது குறித்து நியூசிலாந்து முன்னாள் கேப்டன் வெட்டோரி கூறுகையில்,''சர்ச்சைக்குரிய 'வைடு', உயரமான 'நோ-பால்' தொடர்பாக 'ரிவியு' செய்ய வீரர்களை அனுமதிக்க வேண்டும். அம்பயர்களின் முடிவு பல நேரங்களில் பவுலருக்கு எதிராக அமைந்துள்ளது. இந்த தவறுகளை டி.ஆர்.எஸ்., மூலம் திருத்த வேண்டும்,''என்றார்.

தென் ஆப்ரிக்காவின் இம்ரான் தாகிர் கூறுகையில்,''பேட்டர்கள் நாலாபுறமும் விளாசும் போது, 'வைடு யார்க்கர்', 'வைடு லெக் பிரேக்' முறையில் பந்துவீசி தான் அவர்களை கட்டுப்படுத்த முடியும். இதனை 'வைடு' என அம்பயர் அறிவித்தால், பிரச்னை ஏற்படுகிறது. இதை தவிர்க்க 'ரிவியு' கேட்க வீரர்களை அனுமதிக்க வேண்டும்,''என்றார்

ராஜஸ்தான் அணி பயிற்சியாளர் சங்ககரா கூறுகையில்,''பந்துவீசுவதற்கு முன்பே 'பேட்டர்கள்' 'கிரீசில்' இருந்து விலகிச் சென்று விளாச தயாராகின்றனர். இவர்களை சமாளிக்கும் விதத்தில் பந்துவீசினால் 'வைடு' என அறிவிக்கின்றனர். விதிகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும்,'' என்றார்.

Advertisement
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login

forgot password? Enter yourpassword
(Press Ctrl+g to toggle between English and Tamil)
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

சென்னைக்கு வாய்ப்பு எப்படி

மே 09,2022 மும்பை: 'டி-20' கிரிக்கெட் லீக் தொடரின் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு சென்னை அணிக்கு இன்னும் உள்ளது. இந்தியாவில், 'டி-20' கிரிக்கெட் லீக் 15வது சீசன் ...
 ‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

‘பிளே–ஆப்’ செல்லுமா சென்னை

மே 02,2022 மும்பை: 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேற சென்னை உட்பட 9 அணிகள் போட்டியிடுகின்றன. இந்தியாவில் 15வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. 'நடப்பு சாம்பியன்' சென்னை உட்பட 10 ...
‘தல’ வா... தலைமை ஏற்க வா... * தோனிக்கு வழிவிட்ட ஜடேஜா

‘தல’ வா... தலைமை ஏற்க வா... * தோனிக்கு வழிவிட்ட ஜடேஜா

ஏப்ரல் 30,2022 புனே: கேப்டன் பதவியில் இருந்து விலகினார் ஜடேஜா. மீண்டும் தோனி தலைமையில் சென்னை அணி களமிறங்க உள்ளது. இந்தியாவில் நடக்கும் 'டி-20' தொடரில் நடப்பு சாம்பியன் சென்னை ...