Press "Enter" to skip to content

முதல் பக்கம் » சிறப்பு கட்டுரை

சுவர்களில் நீர்க்கசிவு இருந்தால் பாக்டீரியாக்கள் உருவாகும்


வீட்டு சுவர்களில் லேசான நீர்க்கசிவு ஏற்பட்டால் அதை முறையாக கவனித்து சரி செய்ய வேண்டும். புதிதாக கட்டப்பட்ட வீட்டில் சில ஆண்டுகளில் ஏற்படும் விரிசல்களை கண்டு அச்சப்படும் நபர்கள் கூட பழைய கட்ட விரிசல்களை அலட்சியம் செய்கின்றனர்.

பொதுவாக கட்டடங்களில் ஏற்படும் விரிசல்களை சரியான முறையில் ஆராய்ந்து சரியான முறையில் தீர்க்க வேண்டும். இதில் நேரடியாக கொத்தனாரை அழைத்து வந்து சீரமைப்பு பணிகளை செய்வது பலருக்கும் வழக்கமாக உள்ளது.கட்டட விரிசல்களின் உண்மையான காரணம் என்ன என்பதை அறியாமல் மேலோட்டமாக சீரமைத்தால் பல்வேறு புதிய சிக்கல்கள் ஏற்படும். விரிசல்கள் கட்டடத்தை பலவீனமாக்கும் என்ற அடிப்படையில் மட்டும் பார்க்காதீர்கள்.

நிலத்தில் ஈரம் அதிகமாகி அதனால் சுவர்களில் விரிசல் ஏற்படலாம். மேலும் நீர்க்கசிவு போன்ற காரணங்களாலும் கட்டடத்தில் விரிசல்கள் ஏற்படலாம். இவ்வாறு விரிசல் ஏற்படும் இடங்களில் என்ன நடக்கிறது என்பதை யாரும் துல்லியமாக பார்ப்பதில்லை. சிமென்ட் கலவையால் பூசப்பட்ட சுவரில் விரிசல் ஏற்பட்டால், அது மேற்பூச்சு கோளாறால் வந்ததா, செங்கல் சுவரில் ஏற்பட்ட உட்புற உடைப்பால் வந்ததா என்று ஆராய வேண்டும்.விரிசல் ஏற்பட்ட இடங்களில் ஈரமும், வெப்பமும், காற்றும் சேரும். இவை ஒன்று சேரும் இடத்தில் பல்வேறு வகை பாக்டீரியாக்களை உருவாக்கும். இந்த பாக்டீரியாக்கள் மெல்ல வளர்ந்து காளான்களாக மாறும். இதில் இருந்து வெளியாகும் கிருமிகள், அங்கு வசிப்போருக்கு பல்வேறு உடல் நல குறைபாடுகளை ஏற்படுத்தும்.
நீர்க்கசிவு, ஓதம் போன்றவை கட்டடத்தை மட்டும் தான் அழிக்கும் என்று பலரும் நினைக்கின்றனர். உண்மையில் விரிசல்கள் பல மாதங்கள் அப்படியே இருந்தால் அது நோய் பரப்பும் கிருமிகள் உற்பத்தி மையங்களாக மாறும்.
தொடர் மழை, பிளம்பிங் குறைபாடுகள் காரணமாகவும் கட்டடத்தில் விரிசல் ஏற்படலாம். இத்தகைய விரிசல்கள் ஏற்பட்டால் பொறியாளர் வழிகாட்டுதல்களை பெற்று சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் கட்டுமான வல்லுனர்கள்.


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

மேலும் சிறப்பு கட்டுரை